Wednesday, 30 November 2016

                    கேள்வி --பதில் 
 கேள்வி --OFFICIATING பார்க்கும் நமது GDS தோழர்களுக்கு இந்த 
மாதமாவது 7 வது ஊதியக்குழுவில் பரிந்துரைத்த புதிய ஊதியம் கிடைக்குமா???
பதில் -இதுகுறித்து நமது மாநிலச்சங்கம் 24.11.2016 அன்று CPMG அவர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் விவாதித்தது .CPMG அவர்களும் இது குறித்து DIRECTORATE க்கு எழுதி இருப்பதாகவும் --விரைவில் இதற்கான நல்ல செய்திகள் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்கள் .
------------------------------------------------------------------------------------------------------------------
GDS கமிட்டி ..........  GDS கமிட்டி........ GDS கமிட்டி
GDS கமிட்டி அறிக்கை நமது துறை அமைச்சர் அவர்களின் பார்வைக்கு 28.11.2016அன்று வைக்கப்பட்டுள்ளது .அமைச்சர் அவர்களின் பார்வைக்கு  பின்பு முறையாகவெளிடப்படும் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன .
        முத்தின தேங்காய் கடைக்கு வந்துதானே தீரணும் 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புதிய நோட்டுகளை (சட்டப்படியான செல்லும் நோட்டுகளை அதாவது பழைய 500 /1000 தவிர்த்து )டெபாசிட் செய்ப்பவர்களுக்கு மட்டுமே  வித்ட்ராயல் செய்ய ரூபாய் 24000 என்ற அளவு தளர்த்தப்பட்டுள்ளது .மேலும் இது குறித்து அஞ்சலகத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .
இதற்கான முறையான படிவத்தை பராமரிக்க வேண்டும் 
வாடிக்கையாளர் PAY IN SLIP இல் DENOMINATION எழுத வேண்டும் 
COUNTERFOIL இல் பின்பக்கம் நாம் வரிசை எண்ணை குறிக்க வேண்டும் ..மேலும் பார்க்க
-----------------------------------------------------------------------------------------------
பஞ்சபடிக்கான உத்தரவு நேற்று மாலைதான் கோட்ட அலுவலகத்திற்கு வந்துள்ளது .இன்று உங்கள் SB கணக்குகளில் வரவு வைக்கப்படும் .

----------------------------------------------------------------------------------------------------அன்பார்ந்த தோழர்களே !
 நமது  கோட்ட மாநாடு அழைப்பிதழ் உங்களுக்கு கிடைத்திருக்கும் என நம்புகிறோம் .அழைப்பிதழில் நிகழ்ச்சி நிரல் பகுதியில்  4.12.02016 கு பதில் 14.12.2016 என  தவறுதலாக அச்சிடப்பட்டதை 04.12.2016 என  திருத்தி கொள்ளவும் .
       தோழமையுடன்  S .காலப்பெருமாள்  கோட்ட செயலர் 

Tuesday, 29 November 2016

அனைத்து  தோழர்களுக்கும் மாநாட்டுக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுவிட்டது, அழைப்பிதழ் கிடைக்காதவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்.

சேமிப்பு கணக்குகளில் இருந்து பணம் எடுக்க வரையறுத்த அளவை தாண்டி 29.11.2016 முதல் 
பணம் எடுக்கலாம் --ரிசர்வ் வங்கி அறிவிப்பு 
                       ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது ?
 

GDS பஞ்சப்படி உயர்வு --125% இல் இருந்து 132 % ஆக உயர்வு 

Monday, 28 November 2016

நமது நெல்லை கோட்ட மாநாடு --அம்பை கிளை சங்க மாநாடு அழைப்பிதழ் 
அனைவரும் வருக !




                                          புரட்சி தலைவருக்கு வீர வணக்கம் 
                                                                     பெடல் காஸ்ட்ரோ    ( 1926--2016)
        கியூபா அமெரிக்க கண்களில் குத்திய முள்--
உலகம் உள்ளவரை உறுத்திக்கொண்டே இருக்கும்   
கியூபாயில் புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தவர் ..நம் சமகால மக்கள் தலைவர் .இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற போராளி --கல்வியையும் -மருத்துவத்தையும் முழுமையாக அம்மக்களை சென்றடைய செய்தவர் .இளம் வயதிலே மாவீரன் அலெக்ஸ்சாண்டர்   போன்றோர்களின் துணிச்சலை கண்டு வசீகரப்பட்டவர் .தன் வாழ்நாளில் அமெரிக்க அதிபர்கள் அனைவரையும் அலட்சியமாக பார்த்தவர் .புகழுக்கும் பெயருக்கும் மயங்கியதில்லை --இதுபோன்ற அபூர்வ தலைவர்களை நம் சமகாலத்தில் பார்த்தது நமக்கு ஒரு பாக்கியம் .வாழ்க !காஸ்ட்ரோ புகழ் !
                                                   

Sunday, 27 November 2016

2017ம் வருடத்திற்கான விடுமுறை தினங்கள்

பாலாமடை BPM
ப.சுடலைமுத்து
அவர்களின்தாயார்
நேற்றுகாலமானார்
என்பதை
வருத்ததுடன்
தெரிவித்துக் கொள்கிறோம்

OFFICIATING பார்க்கும் GDS ஊழியர்களுக்கு 7 வது  ஊதிய குழு அறிவித்த புதிய ஊதியம் வழங்கப்படாதது குறித்து நமது மாநில சங்கம் PMG அலுவலகத்தில் எழுத்து பூர்வமான கோரிக்கையை நான்கு மாத மாதாந்திர பேட்டியில் சமர்ப்பித்தது, கோரிக்கையை PMG அவர்கள் DG அலுவலகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளார்கள்  




GDS கமிட்டி அறிக்கை அடுத்த வாரம் இந்தியா போஸ்ட் வெப்சைட்டில் வெளியிடப்படும் என அஞ்சல் துறை அறிவிப்பு 

Saturday, 26 November 2016

GDS கமிட்டி அறிக்கை நகலினை  தொழிற்சங்கத்திற்கு தரவேண்டும்  --பொதுச்செயலர் தோழர் SS .மஹாதேவையா கோரிக்கை --
ஏழாவது சம்பளக்குழுவின் 900 பக்க அறிக்கையை உடனே வெளியிட்ட அரசாங்கம்  நமது அறிக்கையை மட்டும் மூடி மறைப்பது ஏன் ?

Friday, November 25, 2016

REQUEST FOR GDS COMMITTEE REPORT

பதவி உயர்வு --பணிநிறைவு பெறும் GDS ஊழியர்களுக்கு செவேரென்ஸ்  தொகை வழங்குவது குறித்து விளக்க ஆணை --முன்னதாக இதை NPS திட்டத்தில் சேர்ப்பதாக கூறி வந்ததால் பதவி உயர்வு பெற்ற GDS ஊழியர்கள் பெரும் சிரமத்திற்குஆளாகினார்கள் 

.2.மேலும் சர்வீஸ் யில் இருந்து  டிஸ்சார்ஜ் (ஓய்வு பெறும் GDS ஊழியர்களை இப்படித்தான் அழைக்கிறது நிர்வாகம் ) செய்யப்பட்ட ஊழியர்களுக்கு NSDL   நிறுவனத்திடம் இருந்து வரும் படிவத்தை (அதில் NPS திட்டத்தில் இருந்து விலகிக்கொள்வதாக ஒப்புதல் கடிதம் ) கோட்டநிர்வாகம் கட்டாயப்படுத்தி வாங்கக்கூடாது என்றும் ரூபாய் 30000 க்கு மேல் GDS கணக்கில் சேரும் தொகைக்கு வாழ்நாள் ஊதியம் வழங்க அஞ்சல் வாரியத்திடம் இருந்து  உத்தரவு வர இருப்பதாக  CPMG அவர்கள் தெரிவித்துள்ளார்கள் .ஆகவே  நமது கோட்டங்களில் பணிநிறைவு பெற்ற ஊழியர்கள் NSDL கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்த பட கேட்டுக்கொள்கிறோம் .

Regarding payment of Severance Amount to the beneficiaries of SDBS and NPS Subscription deductions under SDBS.

Regarding payment of Severance Amount to the beneficiaries of SDBS and NPS Subscription deductions under SDBS.

Friday, 25 November 2016

Thursday, 24 November 2016

Thursday, November 24, 2016

GDS Committee report submitted Today.

GDS Committee report submitted Today.

Detail will publish soon.

GDS கமிட்டி இன்று தனது அறிக்கையை இந்திய அஞ்சல் துறை முதல்வரிடம் சமர்பித்தது

Wednesday, 23 November 2016

பணிமூப்பு அடிப்படையில் வழங்கப்படும் 25% ஒதுக்கீட்டில் தபால்காரர் பணியிடம் GDS தோழர்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுத்திட மத்திய சங்கத்திற்கு மாநில சங்கம் கடிதம் எழுதியுள்ளது 




officiating பார்க்கும் தோழர்களே, உங்கள் பதிலிகளுக்கான (SUBSTITUTE - OUTSIDER ) விடுப்பு  விண்ணப்பங்களை உங்களுடைய SPM மூலம் உங்களுடைய ASP அவர்களுக்கு அனுப்பி விட்டீர்களா????


அனுப்பாதவர்கள் உடன் அனுப்பி வைக்கவும். ஒருவர் தாமதமாக அனுப்பினாலும் மற்ற அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.


அதே போல் உங்களுடைய சம்பள பில்லை உங்கள் SPM மூலம் உங்களுடைய ASPக்கு வரும் 30ம் தேதி அனுப்பி வைக்கவும்.



அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்க பூர்த்தி செய்து பின் பக்கத்தில் தங்கள் முகவரியை எழுதி உங்களுடைய ASP அவர்களிடம் சான்றொப்பப்பம் பெற்று ருபாய் 60 உடன் வரும் 28-11-2016 திங்கள் கிழமைக்குள் நமது கோட்ட சங்க தலைவர் திரு ஞான பாலாசிங் அவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது 
டிசம்பர் 1 அன்று அணைத்து அடையாள அட்டை விண்ணப்பங்களும் நமது முது நிலை கோட்ட கண்காணிப்பாளரிடம் கையொப்பம் பெற சமர்ப்பிக்கபடும்.
ஆதலால் தோழர்கள் விரைவாக செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 


10 வது மாநாட்டிற்கான செயற்குழு கூட்டம்

டிசம்பர்- 4 - 2016 அன்று நடைபெற இருக்கும் 10 வது மாநாட்டிற்கான செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் வைத்து நடைபெற்றது.
கோட்ட சங்க தலைவர் திரு ஞான பாலாசிங் அவர்கள் தலைமை ஏற்றார்கள், கோட்ட செயலாளர்  திரு காலப்பெருமாள் அவர்கள் ஈராண்டு அறிக்கை வாசித்து செயற்குழுவுக்காக சமர்பித்தார்கள். கோட்ட பொருளாளர் திரு முத்தையா அவர்கள் ஈராண்டு வரவு செலவு கணக்கை வாசித்து செயற்குழுவுக்காக சமர்பித்தார்கள்.
நமது 10வது கோட்ட சங்க மாநாட்டிற்கான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது 

மேலும் இம்மாநாடு GDS ஊழியர்கள் இலாகா ஊழியர்களாக நமது அஞ்சல் துறை மற்றும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தும் மாநாடாக இருக்க வேண்டும் என செயலாளர் திரு காலப்பெருமாள்  சிறப்புரை ஆற்றினார்கள். 

அம்பை கோட்ட செயலர் திரு ஏகாம்பரம் அவர்கள் வாழ்த்துரை ஆற்றினார்கள்.


மற்றும் JCA பேரவை திரு ஜேக்கப் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.


கூட்டம், திரு நம்பி அவர்கள் நன்றி உரை ஆற்ற செயற்குழு உறுப்பினர்கள் வாழ்த்துக்களுடன் இனிதே நிறைவு பெற்றது 






இம்மாத மாதாந்திர பேட்டியில் நெல்லை கோட்ட அளவில் தபால்காரராக officiating  பணியாற்ற கோட்ட அளவில் விருப்ப மனுக்கள்   வரவேற்கப்படுகின்றன... 

SB அக்கவுன்ட்டில் மட்டும் பழைய 500 1000 ரூபாய் நோட்டுக்களை கொன்டு டெபாசிட் செய்யலாம் மற்ற RD TD NSC KVB RPLI REGISTER SPEED BOOKING TRC BOOKING EMO BOOKING ல் பழைய500 1000 ரூபாய ் நோட்டுக்களை பயன்படுத்துவதை DOP நிறுத்தி வைத்துள்ளதுமற்ற தோழர்களுக்கும் தெரியப்படுத்தவும்

                                  முக்கிய செய்திகள் 
GDS கமிட்டி அறிக்கை 24.11.2016 அன்று அஞ்சல் வாரிய செயலரிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
------------------------------------------------------------------------------ 
சேமிப்புக்கணக்குகளில்பழைய ரூபாய் 500 /1000 டெபாசிட் செய்ய கூடாது --ரிசர்வ் வங்கி அதிகரிப்பு 
Deposit of old demonetized notes of 500 and 1000 in Small Savings Scheme - Finmin Order 22.11.2016

F.No.1/042016-NS
Ministry of Finance
Department of Economic Affairs
(Budget Divisional)
North Block, New Delhi
Dated 22nd November 2016
To
1. The Chief General Manager
Reserve Bank of India
Department of Government & Bank Accounts
Central Office, Byculla Office Accounts
4th floor, Opposite Mumbai Central Railway Station
Byculla, Mumbai - 400008

2. The Deputy Director General (FS)
Department of Posts
Dak Bhawan, Sansad Marg, New Delhi

3. The Joint Director & HOD
National Savings Institute
ICCW Building

4. Deen Dayal Upadhyay Marg
New Delhi-110003

Subject: Deposit of old demonetized notes of 500 and 1000 in Small Savings Scheme

Sir,
I am directed to state that Ministry of Finance has received references from Banks whether currency notes of Rs.500 and Rs.1000, discontinued w.e.f.9.11.2016, can be deposited in accounts opened under small savings schemes. The matter was examined in this Ministry and it has been decided that subscribers of Small Savings Scheme may not be allowed to deposit old currency note of Rs.500 and Rs.1000, in Small Savings Schemes.

2. This may be compiled strictly.

3. This has the approval of Secretary (Economic Affaris).

Yours faithfully,
sd/-
(Padam Singh

Tuesday, 22 November 2016

நமது சங்க மாநாட்டிற்கு நேற்று நன்கொடை அளித்த தோழர்கள் விவரம் 
1.  நாங்குநேரி  - Rs.1800
2.  கங்கைகொண்டான் - Rs.1400
3.  தச்சநல்லூர் - Rs.600
நன்கொடை அளித்த தோழர்களுக்கு நன்றி

அன்பார்ந்த தோழர்களே 


இன்று மாலை 
6 மணி அளவில் நமது நெல்லை கோட்ட சங்க  செயற்குழு கூட்டம்  பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.தோழர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள் 

இப்படிக்கு நெல்லை கோட்ட கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் நெல்லை கோட்டம்  

                                                           எதிர்பார்க்கிறோம் 
GDS கமிட்டி அறிக்கை இந்தமாத இறுதியில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் .அறிக்கை   சாதகமாக இருந்தால் அதை முழுமையாக அமுல்படுத்த நாம் போராட வேண்டும் .அறிக்கையே பாதகமாக இருந்தால் அதையும் எதிர்த்து நாம் போராட தயாராகுவோம் 
                                            AIGDSU நெல்லை 

Monday, 21 November 2016

Relaxation of Rs.25000/- limit for deposits in Branch Post Offices (upto 30th December, 2016)

From: Director (CBS)
Sent: 18 November 2016 17:57
To: All CPMG; CPMG Telangana Circle
Cc: All PMG; DDG (Financial Services); All Postal Divisions; Director (Vigilance)
Subject: Relaxation of Rs.25000/- limit for deposits in Branch Post Offices.


 Respected Sir/Madam,
                       
In view of current order /instructions by the Government regarding supply of  adequate cash for funding to rural areas in Branch Post Offices,  and also  an  email was sent by this on 14th Nov, 2016 & 15th  Nov, 2016,  that  withdrawals and deposits in Branch Post Office should be encouraged, so that public in rural areas get access to new currency notes..

With a view to facilitate this effort of the Government, the  SB order No.5 dated 21.06.2016,  Point No. 18 i.e., “ No BPM should accept cash deposit transaction for more than Rs. 25000/- in any account in a day. Instructions in this regard should issued by Circle/Regions and Divisions” is here by relaxed till ​30th December, 2016. It is re iterated  that Cap for 25,000 /- has been lifted (upto 30th December, 2016).


With regards,

Sachin Kishore
Director (CBS)
Sansad Marg,
Dak Bhavan

Sunday, 20 November 2016

அன்பார்ந்த தோழர்களே !
 22.11.2016 அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டியில் நாம் விவாதிக்க இருப்பவை .
1.Officiating பிரச்சனையில் கோட்ட நிர்வாகம் சீரான நடைமுறைகளை பின்பற்ற உபகோட்டங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் .
2.TRCA உயர்வு /குறைப்பு சம்பந்தமான மண்டல அலுவலக கடித நகல்களை சம்பந்தப்பட்ட BO களுக்கு அனுப்பவேண்டும் .
3.TRCA பிடித்தம்சம்பந்தமாக அனைத்து விவரங்களையும் PAYSLIP இல் சேர்த்து கொடுக்க வேண்டும் .
4.சாட்டுபத்து   BPM அவர்களுக்கு தற்சமய நிலவரத்தை கணக்கில் கொண்டு அவரது விண்ணப்பத்தை பரீசீலிக்க வேண்டும் .
5.AP நாடனுர் GDSMC /DP பதவியை GDSMD ஆக மாற்றவேண்டும் .
6.பிரம்மதேசம் GDSMD பார்க்கும் (முன்னாள் GDSMC அரிகேசவநல்லூர் )
ஊழியருக்கு GDSMD ஊதியம் வழங்கவேண்டும் .
7.கள்ளநோட்டுகளை கண்டுபிடிக்கும் கருவியை அனைத்து BO களுக்கும் வழங்க வேண்டும் .
8.மஹாராஜநகர் அலுவலகத்தில் GDS பீட்டுகளை  மறுவரையரை செய்யவேண்டும் .
கீழ்காணும் தோழர்கள் பங்கேற்கிறார்கள் 
S.காலப்பெருமாள் 
I.ஞானபாலசிங் 
S.ஏகாம்பரம் .   
                நன்றி .S.காலப்பெருமாள் கோட்ட செயலர்  .  

Saturday, 19 November 2016

நாளை MTS தேர்வு எழுத செல்லும் GDS தோழர்களுக்கு நெல்லை கோட்ட கிராமிய ஊழியர் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .

Thursday, 17 November 2016

கோட்ட சங்க மாநாட்டிற்கான செயற்குழு கூட்டம்

நமது நெல்லை கோட்ட சங்க மாநாட்டிற்கான செயற்குழு கூட்டம் வரும் நவம்பர் 22 அன்று மாலை 6 மணி அளவில் பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.

அன்று மாநாட்டுக்கான வரவு செலவு குறித்து ஆலோசனை நடை பெரும் 

தோழர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள் 

இப்படிக்கு 
நெல்லை கோட்ட கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் 
நெல்லை கோட்டம்  
நமது நெல்லை கோட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு அடையாள அட்டை நமது நெல்லை கோட்ட முது நிலை கண்காணிப்பாளரிடமிருந்து பெற்று தரப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

நமது கோட்ட தோழர்கள் விண்ணப்ப படிவத்தின் பின்  பக்கத்தில் தங்களுடைய வீட்டு முகவரியையும் சேர்த்து எழுதி நமது கோட்ட தலைவர் திரு பாலாசிங் அவர்களுக்கு ருபாய் 60 உடன் வரும் நவம்பர் 30 க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது 



நெல்லை கோட்ட கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் 

Wednesday, 16 November 2016

PRESS INFORMATION BUREAU PRIME MINISTER OFFICE GOVERNMENT OF INDIA.

PRESS INFORMATION BUREAU PRIME MINISTER OFFICE GOVERNMENT OF INDIA.


With regards,

Sachin Kishore
Director (CBS)
Sansad Marg,
Dak Bhavan


From: Director (CBS)
Sent: 14 November 2016 12:27
To: All CPMG
Cc: All PMG; ap.singh@gov.in; Secretary Posts; Member (Banking & HRD)

Subject:- Priority to be given to Branch Offices. 

Respected Sir /Madam,

This is regarding the proper functioning of Branch Offices in view of availability of New currency notes. As informed currency is available in all RBI /SBI chests across the country.  you are requested to instruct all concerned Post Offices to feed BO with adequate new currency note for supporting withdrawal form accounts.
It is also requested to instruct all Divisions/POs to demand sufficient fund from the Banks to cater the need of Branch Post Offices. If Banks are not providing sufficient cash, same to be reported to concerned Bank authority locally. if Post Offices are still not able to  get cash,  the same may be escalated to Directorate Control room. 

It is requested to start sending cash to BOs ,  if Post Offices are receiving required cash (Where Post Office are Open - for today). 

I have been directed to request you to kindly  send email giving details on BO deposit, withdrawal and number of  transactions with value on daily basis. 
With regards,

Monday, 14 November 2016

நமது சங்க மாநாட்டிற்கு நேற்று நன்கொடை அளித்த தோழர்கள் விவரம் 

ராதாபுரம் - RS.2200
தெற்கு கருங்குளம் - RS.1800
கூட்டப்புளி - Rs.200

நன்கொடை அளித்த தொன்டர்களுக்கு நன்றி

Saturday, 12 November 2016

                                       வருந்துகிறோம் 
தோழர் G.ராஜேந்திர போஸ்  M.E. திருநெல்வேலி அவர்களின் தந்தையார் திரு .P .ஞானமுத்து (93)
அவர்கள் 12.11.2016 இரவு  9  மணியளவில்   மரணமடைந்தார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம்.அன்னாரது நல் அடக்கம் 13.11.2016 நண்பகல் 2மணிக்கு அவர்களது சொந்த கிராமமான  கன்னநல்லூரில் நடைபெறும் .தந்தையை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .
                               ----நெல்லை AIGDSU ----------  
      நாங்கள் --நாங்கள் தான் 
விலாசம் தேடி சென்று சேவை செய்த  அஞ்சல் துறையை --இன்று 
விலாசம் விசாரித்து  வரும்   மக்கள் கூட்டம் -
 வெறும் பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு மட்டுமல்ல --
உத்தரவாதம் --உண்மை -உதவி --என பன்முக சேவையில் நமது  
துறை மிளிர்வதை பார்க்கிறோம் 
விரைவான பண பரிமாற்றம்  -கனிவான சேவை 
முகம் சுளிக்காத ஊழியர்கள் -முணுமுணுக்காத உள்ளங்கள்   -
எவ்வளவு என்றாலும் சளைக்காமல் வாங்கும் தோழர்கள் 
 இவைகள் அஞ்சலக ஊழியர்களின் அடையாளங்கள் ---
 பத்திரிகைகளும் --மீடியாக்களும் மற்றவைகளை ஒப்பிடுகையில் அஞ்சலக சேவையை வெகுவாக பாராட்டுகிறார்கள் .
இன்னும் ரெகுலர் வாடிக்கையாளர்கள் வரவில்லை -
செல்வந்தர்களை காணோம்  -அரசியல்வாதிகளை பார்க்கவில்லை 
பெரு முதலாளிகள் எட்டி பார்க்கவில்லை -- ஆனாலும் 
பண மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது - 
பொதுமக்களால் அஞ்சலகம் நிரம்பி வழிகிறது --எங்கள் 
மனமெல்லாம் குதூகலிக்கிறது -ஆனாலும் ,ஆனாலும் 
அரசு ஊழியர்கள் அவ்வளவாக தென்படவில்லை 
அவர்கள் மட்டும் தான் தவணைகளில் காலம் தள்ளினாளும்  --
வருமான வரியை  ஏய்காத  உண்மை தேச பக்தர்கள் 
மத்திய  அரசே !இனியாவது எங்களை ஏய்காதே !
நாங்கள் --நாங்கள் தான் --எங்களுக்கென்று 
ஒதுக்கியதும் இல்லை ! பதுக்கியதும் இல்லை !
இருந்தால் தானே பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு !
              தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 

Friday, 11 November 2016

அன்பார்ந்த தோழர்களே !
 GDS ஊழியர்களுக்கு 01.07.2016 முதல்  பஞ்சப்படி உயர்வு 7 சதம் .நிதியமைச்சக உத்தரவை அடுத்து அஞ்சல் வாரியம் விரைந்து உத்தரவு வழங்கிட நமது மத்திய சங்கம் கோரிக்கை வைத்துள்ளது .
GDS கமிட்டி விரைவில் தனது அறிக்கையை அரசுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .பரிந்துரை  சாதகமாக இருந்தாலும் அதை அமுல்படுத்த அஞ்சல்  வாரியத்தை நாம் நிர்பந்திக்க வேண்டும் .பரிந்துரையே பாதிப்பாக இருந்தால் அதை எதிர்த்தும் நாம் போராட தயாராக இருக்க வேண்டும் .என்று நமது பொது செயலர் தோழர் SS .மகாதேவையா  அறிவித்துள்ளார்கள் .

Thursday, 10 November 2016

ஊதியக்குழு அமுல்படுத்தாத மற்ற பிரிவினருக்கு 01.07.2016 முதல் பஞ்சப்படி 7 சதம் உயர்கிறது .நிதிஅமைச்சக உத்தரவு --இது GDS ஊழியர்களுக்கும் பொருந்தும் .

Rate of Dearness Allowance applicable w.e.f. 1.7.2016 to
employees  of Central Government and
Central Autonomous Bodies continuing to draw
their pay in the pre-revised pay scale/grade pay
 as per 6th Central Pay Commission.

Rate of Dearness Allowance applicable w.e.f. 1.7.2016 to employees of Central Government and Central Autonomous Bodies continuing to draw their pay in the pre-revised pay scale/grade pay as per 6th Central Pay Commission.
 
Rate of Dearness Allowance existing 125% to 132 % w.e.f. 01.07.2016. GDS also.

அன்பார்ந்ததோழர்களே !
 பாரதபிரதமர் அவர்களின் அறிவிப்பினை தொடர்ந்து அஞ்சலகங்களில் 
(Withdrawn Old Series ) WOS குறித்து அஞ்சல் வாரிய உத்தரவு SB ORDER NO 12/2016 பாரீர் 
1.தலைமைஅஞ்சலகங்களிலும் ,துணை அஞ்சலகங்களிலும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றவும் /சேமிப்பு கணக்குகளில் வரவு வைக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும் .
பழைய 500/1000 நோட்டுகளை மாற்ற  வருபவர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட    Annxeure 2 படிவத்துடன் தேவையான செல்லுபடியாகும் அடையாள சான்றிதழை பெற்று கொண்டு ரூபாய் 4000 வரை மதிப்பிலான ரூபாயை கொடுக்கலாம் .இது 10.11.2016 முதல் 24.11.2016 வரை மாற்றலாம் 
2.WOS நோட்டுகளை SB கணக்கில் டெபாசிட் செய்ய உச்சவரம்பு ஏதுமில்லை .( கிளை அஞ்சலகங்களுக்கு அதிகபட்ச தொகை ரூபாய் 25000 என்பதில் மாற்றம் இல்லை ).
அதே அலுவலகத்தில் கணக்கு வைத்திருந்தால் அடையாள சான்றிதழ்கள் தேவையில்லை .வேறுஒரு அலுவலகத்தில் உள்ள கணக்கு இருந்தால் நிச்சயம்  அடையாள சான்றிதழ்கள்  வாங்கியாக வேண்டும் .இது 10.11.2016 முதல் 30.12.2016 வரை  பொருந்தும் .
3.பணம் எடுப்பதற்கு நாளொன்றுக்கு ரூபாய் 10000 எனவும் வாரம் ஒன்றிக்கு ரூபாய் 20000 எனவும் நிர்ணயிக்க பட்டுள்ளது .கிளைஅஞ்சலகங்களை பொறுத்தவரை நாளொன்றுக்கு ரூபாய் 5000 எனவும் வாரத்திற்கு ரூபாய்  20000 எனவும் நிர்ணயிக்க பட்டுள்ளது .இதுவும் 10.11.2016 முதல் 24.112016 வரை தான் பொருந்தும் .
4.அஞ்சலக ஊழியர்கள் குறிப்பாக கவுண்டர் பணியில் உள்ளவர்கள் இது குறித்து போதுமான உணர்திறனும் --இந்த உத்தரவுகளை கண்டிப்பாக கடைப்பிப்பவர்களாகவும் இருக்கவேண்டும் .
                                        WOS குறித்த நேற்றைய உத்தரவு 
1.ஏற்கனவே தொடங்கப்பட்ட கணக்குகளில் KYC இல்லையென்றால் டெபாசிட் ரூபாய் 50000 வரை அனுமதிக்கலாம் .KYC டுக்கப்பட்டிருந்தால்  மூன்று விதமான  ரிஸ்க் அடிப்படையில் ( SB ஆர்டர் 08/2010)  பெற்று கொள்ளவேண்டும் .
2.MPKBY ஏஜெண்டுகளிடம் RD டெபாசிட் பெற்றுக்கொள்ளலாம் .
3.WOS நோட்டுகளை ஸ்பீட் போஸ்ட் போன்றவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது.கணக்குகளில் டெபாசிட் பண்ண மட்டுமே அனுமதிக்கப்படும் .
4.WOS நோட்டுகளை மாற்றுவது ஒரு நபருக்கு ஒரு முறை அதிகபட்சம் 4000   என்பதல்லஒருவருக்கு ரூபாய் 4000 வரைதான் மாற்ற முடியும் .
                      மாநாட்டு நன்கொடைகள் 
பத்மனேரி   -ரூபாய் 1200
திருநெல்வேலி  HO-- 2000
மஹாராஜநகர்        1000 

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......