Saturday, 21 January 2017

திரு கமலேஷ் சந்திராவின் GDS கமிட்டி 2016 முக்கிய பரிந்துரைகள்

திரு கமலேஷ் சந்திராவின் GDS  கமிட்டி 2016 முக்கிய பரிந்துரைகள் 
கமிட்டி அறிக்கையின் தொகுப்புகள் 


திரு கமலேஷ் சந்திரா தலைமையிலான GDS ஊழியர்களுக்கான கமிட்டி அறிக்கையினை சென்ற வருடம் நவம்பர் 24 அன்று சமர்ப்பித்த போதும் இலாகாவும் அரசும் வெளியிட தயக்கம் காட்டியது, நமது தொழிற்சங்கத்தின் தொடர் முயற்சியாலும் பின்னர் அறிவித்த வேலை நிறுத்த போராட்டத்தின் அறிவிப்பிற்கு பிறகு அஞ்சல் துறையானது திரு கமலேஷ் சந்திரா GDS அறிக்கையின் நகலை இந்தியா போஸ்ட் வலைத்தளத்தில் வெளியிட்டது.


அதன் விவரம் மற்றும் முக்கிய பரிந்துரைகள் பின்வருமாறு 

" அஞ்சல் துறை  நமது அடையாளம், ஒவ்வொரு சாமானியனுக்கு விரும்பும் ஒரு மனிதன் என்றால் அது நமது போஸ்ட்மேன் " என்ற பாரத பிரதமரின் வாழ்த்துரையோடு தொடங்கும் கமிட்டி அறிக்கை நன்கு அலசி ஆராய்ந்து இலாகாவுக்கும் அரசுக்கும் GDS ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால்தானோ என்னவோ அரசும் இலாகாவும் தயக்கம் காட்டியது புரிகிறது,


முக்கிய பரிந்துரைகள் 

1. TRCA என்னும் நேர அடிப்படையிலான ஊதிய முறை ஒழிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2.அதுமட்டுமில்லாமல் NEW WAGE PAYMENT சிஸ்டம் அறிமுகம் 
மூன்று ஊதிய நிலைகள் 
          10000---24470 (OTHER THAN BPML  L  EVEL 1)
          12000--29380 (OTHER THAN BPML L EVEL2 &   LEVEL  1)
          14500--35480 (BPM LEVEL 2)

2. குறைந்தபட்ச வேலைநேரம் 4மணிநேரம் 
4.புதிய BO வேலைநேரம் 4 மணி &5 மணிநேரம் . 
5.4 மணிநேர வேலை லெவல் 1அலுவலகம் ஆகவும்  5மணிநேர வேலை லெவல் 2 அலுவலகம் ஆகும்
6.புள்ளி அடிப்படையில் வேலை பளு என்பது  ஒழிக்கபடுகிறது .
7.வருவாய் அடிப்படையில் BO கள்   AB &C என பிரிக்கப்படும் .
8.6வகையான GDS இனி இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றனர் .
 (a )Branch Post Master  (b )Multi Tasking Category 
9.கிளை அஞ்சலக இதர  GDS ஊழியர்கள் Asst BPM என்றும் துணை அஞ்சலகங்களில் பணிபுரியும் GDS ஊழியர்கள் DAK SEVAK (DS )என்றும் அழைக்கப்படுவார்கள் .
10.குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 10000 அதிகபட்ச ஊதியம் ரூபாய் 35480
11.ஆண்டு ஊதிய உயர்வு (INCREMENT ) 3சதம் 
12.குழந்தைகள் படிப்பிற்கு ஆண்டொன்றுக்கு ரூபாய் 6000 (இது புதிதாக அமுல்படுத்தப்படுகிறது )
13.மூன்று பதவி உயர்வுகள் முறையே 12 --24--36 ஆண்டுகளில் வழங்கப்படும் .
14.GRATUITY அதிகபட்சமாக ரூபாய் 500000 (ஐந்து லட்சம் )
15.குரூப் இன்சூரன்ஸ் 5லட்சமாக உயருகிறது 
16.மகப்பேறு விடுப்பு --26 வாரங்கள் (முழுவதும் சம்பளமாக கிடைக்கும் )
17.PATERNITY  லீவு GDS தந்தையருக்கு 7நாட்கள் 
18.EMERGENCY லீவு 5 நாட்கள் 
19.ஜனவரி --ஜூலை தலா 15நாட்கள் விடுப்பு வழங்கப்படும் .அதை 180 நாட்கள் வரை சேமிக்கலாம் .


20.1வருட சேவை முடித்திருந்தாலே தபால் காரர் தேர்வு எழுதலாம் .

21.பணிபுரியும் இடத்தில் மாற்று இடம் என்னும் விதியும் தளர்த்தப்படுகிறது .
22.இடமாறுதல் ஆண் ஊழியர்களுக்கு 3முறையும் -பெண் ஊழியர்களுக்கு எத்தனை முறையாகவும் இருக்கும் .இடமாறுதலை கோட்ட அதிகாரியே கவனிப்பார் .
23.பணியில் இருந்து இறந்த ஊழியர்களின் வாரிசுகள் அனைவருக்கும் தாமதமின்றி வேலை வழங்கப்படும் .


இன்னும் பல பரிந்துரைகள் GDS ஊழியர்களுக்கு சாதகமாக கமிட்டி அறிவித்துள்ளது,

இதை அரசும் இலாகாவும் ஏற்று GDS  ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றவேண்டும் என   வேண்டுகிறோம் 

குறிப்பு: முழு அறிக்கை தகவல் பின்னர் வெளியிடப்படும்.


FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......