Wednesday 23 August 2017

வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

FLASH NEWS


இன்றைய தினம் (22.08.2017) மாலை  6 மணி அளவில் இலாகா முதல்வருடன் (DG) நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையிலும் தொடர்ந்தது இலாகா அமைச்சர் அலுவலகத்தில் நடந்த பேசிச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டது. எனவே நாளைய தினம் (23.08.2017) அனைத்து தோழர்களும் தோழியரும் அவரவர் பணியிடங்களில் பணியில் சேர்ந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நமது தோழர்களுக்கும் ஆதரவளித்த பிற சங்க தோழர்களுக்கும், போராட்டத்தில் நாம்மை காத்த காவல்துறை நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

அடுத்த செய்தி வரும் வரை காத்திருப்போம்

AIGDSU
நெல்லை கோட்டம்


Monday 21 August 2017

போராடு தோழா போராடு!!!!

போராடு --போராடு --வாழ்நாள் முழுவதும் வாழ்க்கை போராட்டம் நடத்தும் GDS தோழர்களே ! வாரம் தாண்டி வேலைநிறுத்தம் செய்வது உனக்கு புதிதல்ல --
GDS ஊழியர்களின் போராட்டம் இன்று ஆறாவது நாளை எட்டியுள்ளது .முதல்நாள் வேலைநிறுத்தம் எப்படி இருந்ததோ அப்படியே இன்றும் தொடர்கிறது .நீதான் GDS ஊழியர்களின் பாதுகாவலன் -உன்னால் மட்டும்தான் GDS ஊழியர்களுக்காக போராடும் துணிவும் -வாதாடும் வல்லமையும் முடியும் .குழம்பிய குட்டையில் உறுப்பினர் சேர்க்கையை முடிக்க நினைத்தவர்கள் நமது எழுச்சியை பார்த்து முக்காடு போட்டு அலைகின்றனர் .நமது போராட்டத்தை பார்த்து பார்த்து வாபஸ் வாங்க நினைத்த 23.08.2017 ஒருநாள் வேலைநிறுத்தத்தை வேண்ட விருப்போடு நடத்த தயங்கி வருகிறார்கள் .யாரை பற்றியும் கவலைப்படாதே !நீதான் உழைக்கும் வர்க்கம் --உன்னிடம் இருந்து தான் GDS யை மீட்டெடுக்கும் உரிமைக்குரல் ஒலிக்கும் =பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது -பேச்சுவார்த்தையின் போது நமது பொதுச்செயலாரின் நிலை உறுதிபட --உன் வேலைநிறுத்தம் மட்டும் தான் தலைவனுக்கு ஊக்கத்தையும் -உற்சாகத்தையும் கொடுக்கும் .
போராடு --போறது வாழ்நாள் முழுவதும் வாழ்க்கை போராட்டம் நடத்தும் தோழா போராட்டம் உனக்கு புதிதல்ல --போராடு --போராடு !
வாழ்த்துக்களுடன் AIGDSU NELLAI


6ம் நாள் போராட்ட அழைப்பு



நாளை காலை 10.00 மணியளவில் 6ம் நாள் வேலை நிறுத்த போராட்டமாக பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்னால் சிறப்பு கண்டன போராட்டம் நடைபெற உள்ளது. நமது தோழர்கள் திரளாக கலந்து கொண்டு போராட்டம்  வெற்றி அடைய அழைப்பு விடுக்கிறோம்.

Whatsapp அல்லாத தோழர்களுக்கும் தகவல் தெரிவித்து அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

AIGDSU
நெல்லை கோட்டம்



4 ம் நாள் போராட்டம்


3ம் நாள் போராட்டம்

3ம் நாள் வேலைநிறுத்த போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

காலை மாலை இரு வேலைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாலையில் அம்பை பகுதி தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

மாலை இலாகா உயர் அதிகாரி திருமதி உஷா சந்திர சேகர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நமது கோரிக்கைகள் வலுவாக எடுத்து வைக்கப்பட்டன, திங்கள் கிழமை வரை வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது...

முன்னதாக நமது பொது செயலாளர் திரு மகாதேவ்வையா அவர்கள் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு விஜய் அவர்களிடம் நமது கோரிக்கை மனுவை சமர்ப்பித்தார்.

இன்று நமது துறை அமைச்சரை சந்தித்து விரைவாக கமிட்டி அறிவிக்கையை அமுல்படுத்த கோரி மனு அளிக்க உள்ளார்.

இன்று மிக சிறப்பான அளவில் மகளிர் தோழர்களையும் அழைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

AIGDSU
நெல்லை கோட்டம்



Thursday 17 August 2017

போராட்டம் தொடர்கிறது

போராட்டம் 3ம் நாளை நோக்கி தொடர்கிறது....



நெல்லை ஸ்தம்பித்தது

வேலை நிறுத்த போராட்டத்தின் 2ம் நாளான இன்று 98 சதவீத B. O க்கள் நெல்லை கோட்டத்தில் வேலை நிறுத்தத்தில் பங்குபெற்றன.

பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு I. ஞான பாலசிங் தலைமை தாங்கினார்.

2ம் வேலை நிறுத்தினால் பண பரிவர்த்தனைகள் முடங்கின மற்றும் கிராமங்கள் மற்றும் S. O க்கள் மற்றும் H. O க்களில் பணியாற்றும் GDS களும் வேலை நிறுத்தத்தினால் தபால் பட்டுவாடா செய்யப்படாமல் தேங்கி கிடக்கின்றன இதனால் நெல்லையில் அஞ்சல் துறை சேவை பெறாமல் நெல்லை ஸ்தம்பித்தது.



போராடுவோம் போராடுவோம்...

போராடும் GDS தோழர்களுக்கு வீர வாழ்த்துக்கள்

கமலேஷ் சந்திரா அறிக்கையை அமுல்படுத்தக்கோரி GDS ஊழியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தம் 16.08.2017 முதல் நாடுமுழுவதும் தீயாய் பரவி வருகிறது .ஒட்டு மொத்த ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி --இந்த புரட்சி இவைகளை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாது

-RPLI பிடிக்க ED வேண்டும் -SB கணக்கு தொடங்க ED வேண்டும் -ED உரிமை கேட்டால் அது தேச குற்றமா ? அதிகாரிகள் நம் போராட்ட உண்மையையே உணர்ந்து நமக்கு மறைமுகமாக வாழ்த்துகிறார்கள் பத்திரிக்கைகள் பாராட்டுகின்றன .பல கோட்டங்களில் நமது இலாகா ஊழியர்கள் நமது போராட்டத்திற்கு எல்லா வகையிலும் ஆதரவு கரம் நீட்டுகிறார்கள் --ஆனாலும் நம்மில் சிலபேர் எதற்காகவோ பயந்து பணி செய்கிறார்கள் --சில அரசியல் அனாதைகள் நமது GDS ஊழியர்களை பொய்கதைகளை கூறி போராட்டத்தின் பாதையை திசைதிருப்பி வருகிறார்கள் .அதைகுறித்தெல்லாம் நாம் கவலைப்படாமல் மாநிலத்தில் நமது போராட்ட வீச்சை அதிகரிக்க வேண்டும் --நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது .இன்றும் போராடப்போகிறோம் --நாளையும் தொடர போகிறோம் ---நமக்கு கோரிக்கை நிறைவேறும் வரை போராட போகிறோம் --


வாழ்த்துக்களுடன் --

AIGDSU நெல்லை


போராட்டம் தொடர்கிறது

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது....

S. காலபெருமாள்
கோட்ட செயலாளர்



Wednesday 16 August 2017

நெல்லை அதிர்ந்தது

திரு கமலேஷ் சந்திரா தலைமையிலான GDS கமிட்டியை உடனடியாக அமுல்படுத்தகோரி இன்று முதல் AIGDSU தேசிய சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துருந்தது.

இந்த அழைப்பை ஏற்று நெல்லை கோட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட தோழர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்

இதனை தொடர்ந்து காலை ஸ்ரீ புறம் திருநெல்வேலி தலைமை தபால் நிலையம் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு கோட்ட தலைவர் I ஞான பாலசிங் தலைமை தாங்கினார்.

வள்ளியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோட்ட செயலாளர் S. கால பெருமாள் தலைமை தாங்கினார்

அம்பை பகுதிக்கு அம்பை கிளை சங்க செயலாளர் ராஜ ராஜன் தலைமைதாங்கினார்.

வேலைநிறுத்த போராட்டத்தில் 98 சதவீத தோழர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நெல்லை அதிர்ந்தது



இன்று முதல் வேலை நிறுத்த போராட்டம்

இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்


Tuesday 15 August 2017

நாளை போராட்ட நிகழ்வுகள்

நெல்லை கோட்ட AIGDSU தோழர்கள் நாளை 16.08.2017 காலை 09.00 மணியளவில்  திருநெல்வேலி தலைமை அஞ்சலகம்  - ஶ்ரீ புரம் முன்னால் அணி திரலுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்

நாளை திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்னால் கோஷம் எழுப்பும் போராட்டம் நடைபெற உள்ளது.

இப்படிக்கு
I. ஞானபாலசிங்
கோட்ட தலைவர்
================================

வள்ளியூர் தலைமை அஞ்சலம் முன்னால் நெல்லை கோட்ட செயலாளர் திரு கால பெருமாள் தலைமையில் நாளை 16.08.2017 காலை 09.00 மணியளவில்  கோஷம் எழுப்பும் போராட்டம் நடைபெற உள்ளது, வள்ளியூர் பகுதி தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்

இப்படிக்கு
S. கால பெருமாள்
கோட்ட செயலாளர்


=================================

அம்பை தலைமை அஞ்சலம் முன்னால் அம்பை கிளை கோட்ட செயலாளர் திரு ராஜ ராஜன்  தலைமையில் நாளை 16.08.2017 காலை 09.00 மணியளவில்  கோஷம் எழுப்பும் போராட்டம் நடைபெற உள்ளது, அம்பை பகுதி தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்

இப்படிக்கு
ராஜ ராஜன்
அம்பை கிளை கோட்ட செயலாளர்

=================================


வேலை நிறுத்த போராட்டம்

இன்று மாலை 14-08-2017 5.30 மணி முதல் 6.30 மணி வரை இலாக்காவுக்கும் நமது சங்கத்திற்கும்ம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை அதனால் வரும் 16.08.2017 முதல் நிச்சயமாக உறுதியாக காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என நமது பொது செயலாளர் திரு மகாதேவ்யா அறிவித்துள்ளார்.

ஆதலால் அனைத்து தோழர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் 100 சதவீதம் கலந்து கொண்டு வெற்றி அடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

S. காலபெருமாள்
I. ஞான பாலசிங்

AIGDSU
நெல்லை கோட்டம்



சுதந்திர தின வாழ்த்துக்கள்

சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்


AIGDSU
நெல்லை கோட்டம்


FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......