Thursday 26 January 2017

CENTRAL WORKING COMMITTEE AT TAMILNADU

CENTRAL WORKING COMMITTEE

With Greetings to all

Our Tamil Nadu Circle union sponserd to conduct the All India Central Working Committee meeting held at karur on 26th February 2017 and 27th February 2017. All CWC members and well wishers are Invited and attended.

Venue: Naradha Gnana Sabha,
            123, Gandhi road,
            Jawahar Bazar,
            Near thiruvalluvar Ground(East Gate),
            Karur - 639 001.
            Tamil Nadu.

All are requested to arrange railway reservation as early.

இனிய குடியரசுத் தின
வாழ்த்துகள்.

நம் பாரதத்தை போற்றுவோம்..
நமது குடியுரிமையை பேணி காப்போம்.

ஜெய்ஹிந்த்.... 🌹🌺🌺🌺🌺🌺

Saturday 21 January 2017

திரு கமலேஷ் சந்திராவின் GDS கமிட்டி 2016 முக்கிய பரிந்துரைகள்

திரு கமலேஷ் சந்திராவின் GDS  கமிட்டி 2016 முக்கிய பரிந்துரைகள் 
கமிட்டி அறிக்கையின் தொகுப்புகள் 


திரு கமலேஷ் சந்திரா தலைமையிலான GDS ஊழியர்களுக்கான கமிட்டி அறிக்கையினை சென்ற வருடம் நவம்பர் 24 அன்று சமர்ப்பித்த போதும் இலாகாவும் அரசும் வெளியிட தயக்கம் காட்டியது, நமது தொழிற்சங்கத்தின் தொடர் முயற்சியாலும் பின்னர் அறிவித்த வேலை நிறுத்த போராட்டத்தின் அறிவிப்பிற்கு பிறகு அஞ்சல் துறையானது திரு கமலேஷ் சந்திரா GDS அறிக்கையின் நகலை இந்தியா போஸ்ட் வலைத்தளத்தில் வெளியிட்டது.


அதன் விவரம் மற்றும் முக்கிய பரிந்துரைகள் பின்வருமாறு 

" அஞ்சல் துறை  நமது அடையாளம், ஒவ்வொரு சாமானியனுக்கு விரும்பும் ஒரு மனிதன் என்றால் அது நமது போஸ்ட்மேன் " என்ற பாரத பிரதமரின் வாழ்த்துரையோடு தொடங்கும் கமிட்டி அறிக்கை நன்கு அலசி ஆராய்ந்து இலாகாவுக்கும் அரசுக்கும் GDS ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால்தானோ என்னவோ அரசும் இலாகாவும் தயக்கம் காட்டியது புரிகிறது,


முக்கிய பரிந்துரைகள் 

1. TRCA என்னும் நேர அடிப்படையிலான ஊதிய முறை ஒழிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2.அதுமட்டுமில்லாமல் NEW WAGE PAYMENT சிஸ்டம் அறிமுகம் 
மூன்று ஊதிய நிலைகள் 
          10000---24470 (OTHER THAN BPML  L  EVEL 1)
          12000--29380 (OTHER THAN BPML L EVEL2 &   LEVEL  1)
          14500--35480 (BPM LEVEL 2)

2. குறைந்தபட்ச வேலைநேரம் 4மணிநேரம் 
4.புதிய BO வேலைநேரம் 4 மணி &5 மணிநேரம் . 
5.4 மணிநேர வேலை லெவல் 1அலுவலகம் ஆகவும்  5மணிநேர வேலை லெவல் 2 அலுவலகம் ஆகும்
6.புள்ளி அடிப்படையில் வேலை பளு என்பது  ஒழிக்கபடுகிறது .
7.வருவாய் அடிப்படையில் BO கள்   AB &C என பிரிக்கப்படும் .
8.6வகையான GDS இனி இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றனர் .
 (a )Branch Post Master  (b )Multi Tasking Category 
9.கிளை அஞ்சலக இதர  GDS ஊழியர்கள் Asst BPM என்றும் துணை அஞ்சலகங்களில் பணிபுரியும் GDS ஊழியர்கள் DAK SEVAK (DS )என்றும் அழைக்கப்படுவார்கள் .
10.குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 10000 அதிகபட்ச ஊதியம் ரூபாய் 35480
11.ஆண்டு ஊதிய உயர்வு (INCREMENT ) 3சதம் 
12.குழந்தைகள் படிப்பிற்கு ஆண்டொன்றுக்கு ரூபாய் 6000 (இது புதிதாக அமுல்படுத்தப்படுகிறது )
13.மூன்று பதவி உயர்வுகள் முறையே 12 --24--36 ஆண்டுகளில் வழங்கப்படும் .
14.GRATUITY அதிகபட்சமாக ரூபாய் 500000 (ஐந்து லட்சம் )
15.குரூப் இன்சூரன்ஸ் 5லட்சமாக உயருகிறது 
16.மகப்பேறு விடுப்பு --26 வாரங்கள் (முழுவதும் சம்பளமாக கிடைக்கும் )
17.PATERNITY  லீவு GDS தந்தையருக்கு 7நாட்கள் 
18.EMERGENCY லீவு 5 நாட்கள் 
19.ஜனவரி --ஜூலை தலா 15நாட்கள் விடுப்பு வழங்கப்படும் .அதை 180 நாட்கள் வரை சேமிக்கலாம் .


20.1வருட சேவை முடித்திருந்தாலே தபால் காரர் தேர்வு எழுதலாம் .

21.பணிபுரியும் இடத்தில் மாற்று இடம் என்னும் விதியும் தளர்த்தப்படுகிறது .
22.இடமாறுதல் ஆண் ஊழியர்களுக்கு 3முறையும் -பெண் ஊழியர்களுக்கு எத்தனை முறையாகவும் இருக்கும் .இடமாறுதலை கோட்ட அதிகாரியே கவனிப்பார் .
23.பணியில் இருந்து இறந்த ஊழியர்களின் வாரிசுகள் அனைவருக்கும் தாமதமின்றி வேலை வழங்கப்படும் .


இன்னும் பல பரிந்துரைகள் GDS ஊழியர்களுக்கு சாதகமாக கமிட்டி அறிவித்துள்ளது,

இதை அரசும் இலாகாவும் ஏற்று GDS  ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றவேண்டும் என   வேண்டுகிறோம் 

குறிப்பு: முழு அறிக்கை தகவல் பின்னர் வெளியிடப்படும்.


தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்க வலியுரித்தி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (20-01-2017) மாலை 6 மணியளவில் அஞ்சல் துறையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இனைந்து AIGDSU உட்பட, பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம் திருநெல்வேலி முன்னால்  கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் காட்சி தொகுப்புகள்.

Friday 20 January 2017

20.11.16 அன்று நடந்த GDSலிருந்து   MTS ஆக  பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வில் கலந்து கொண்டவர்களின் மார்க் லிஸ்ட் வெளியாகி உள்ளது. 

Wednesday 18 January 2017

GDS கமிட்டி அறிக்கை அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டது

FLASH NEWS FLASH NEWS FLASH NEWS


GDS கமிட்டி அறிக்கை அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டது 

கீழ் காணும் லிங்கை கிளிக் செய்து அறிக்கை நகலை டவுன்லோட் செய்து கொள்ளவும் 




கமிட்டி அறிக்கையை போராடி பெற்று தந்த தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் மிக்க நன்றி 




அஞ்சல் துறை, தேர்தல் கமிஷன் தடையில்லா சான்று தந்தவுடன் GDS கமிட்டி அறிக்கையை வெளியிடப்படும், அதனால் தொழிற்சங்கங்கள் தங்களது போராட்டங்களை கைவிட வேண்டும் என நமது தொழிற்சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளது

இப்படிக்கு
தோழர் S. காலபெருமாள்
கோட்ட செயலாளர்

Monday 16 January 2017

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு 

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு 

GDS கமிட்டி அறிக்கை அரசுக்கு அளித்து 52 நாட்கள் கடந்த பின்னும் இன்று வரை அறிக்கை வெளியிடப்படாததை கண்டித்து உடனடியாக  அறிக்கையினை வெளியிடாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்திட 23.01.2017 அன்று இலாகாவுக்கு நோட்டீஸ்  அனுப்புவதென்றும் 07.02.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்று மத்திய சங்கம் இன்று (16.01.2017) இலாகாவுக்கு கடிதம் எழுதி உள்ளது.

போராட தயாராகுங்கள் தோழர்களே

நமது வாழ்வதரத்துக்கான போராட்டம்....

நெருப்பென புறப்பட்டு வாரீர்....

Saturday 14 January 2017

FLASH NEWS

GDS கமிட்டி அறிக்கை தேர்தல் கமிஷனரிடம் அனுமதி பெற்றபின் வெளியிடப்படும்.கமிட்டி அறிக்கையினை இலாகா 16.01.2017 அன்று தேர்தல் கமிஷன் அனுமதிக்காக அனுப்ப உள்ளது. 
பொய் பிரச்சாரம் செய்பவர்களின் வதந்திகளை நம்பாமல் AIGDSU சங்கத்தின் அதிகார பூர்வ இணையதள செய்திகளை மட்டுமே தோழர்கள் பயன்படுத்துமாறு மாநில செயலர்  திரு A இஸ்மாயில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இங்ஙனம்
S. ால பெருமாள்
கோட்செயலாளர்

தை பிறந்தால் வழி பிறக்கும்

இந்த தை பிறந்து நமது வாழ்விலும் விவசாயிகளின் வாழ்விலும் வழி பிறக்கட்டும்.

பொங்கலோ பொங்கல்!!!

நமது தோழர்களுக்கு
AIGDSU நெல்லை கோட்டம்
பொங்கல் நல்வாழ்த்துகளை
தெரிவித்துக்கொள்கிறது

Tuesday 10 January 2017

தமிழர்க திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மத்திய அரசு கட்டாய விடுமுறை பட்டியலில்  சேர்த்து வரும் 14-01-2017 அன்று பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டது....
நேற்று 9-1-2016 தபால் துறை செயலருக்கு AIGDSU பொது செயலாளர் திரு மஹாதேவையா கடிதம் எழுதியுள்ளார்,.  கடந்த 24-11-2016 அன்று திரு கமலேஷ் சந்திரா தலைமையிலான GDS  கமிட்டி தனது அறிக்கையை சமர்பித்தபின்னர், தொழிற்சங்கத்திற்கு அறிக்கை நகலை தருவதாக தகவல் அனுப்பினீர்கள் அனால்   இதுவரை தொழிற்சங்கத்திற்கு அதன் நகலை தராதது குறித்து பல முறை கடிதம் எழுதியும் இது வரை கமிட்டி நகல் தரப்படவில்லை, ஆதலால் உடன் ஒரு வாரத்திற்குள் கமிட்டி நகலை தொழிற்சங்கத்திற்கு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் கமிட்டி நகல் தராமல் இருப்பது கடும் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் 

இப்படிக்கு 
தோழர் கால பெருமாள் 
நெல்லை கோட்ட செயலாளர் 

Monday 9 January 2017

AIGDSU நெல்லை கோட்ட பொருளாளர் மற்றும் வீ. எம் சத்திரம் BPM திரு நம்பி அவர்களின் தந்தையர் திரு R. ஆறுமுகம் வயது 76 அவர்கள் இன்று காலமானார் அன்னாரது இறுதி சடங்கு நாளை 10-01-2017 செவ்வாய் கிழமை காலை 11.00 மணியளவில் வீ. எம் சத்திரம் , கதவு என் 409, சரண்யா நகர் கிழக்கு இல் வைத்து நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். அன்னாரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

Saturday 7 January 2017

OFFICIATING பார்க்கும் GDS பணியாளர்களுக்கு ஏழாவது ஊதிய குழு பரிந்துரைத்த புதிய ஊதியத்தை வழங்க கோரி துறை செயலாளருக்கு கடந்த 21-12-2016 அன்று சங்க பொது செயலாளர் திரு மஹாதேவையா எழுதிய கடிதத்தின் நகல்

Friday 6 January 2017

நமதுசங்கடைரி   
தயாரிப்புவேலை 
நடந்துகொண்டு
உள்ளதுஅதில்
பெயர்புதிதாக
சேர்க்கபோன்எண்
திருத்தம்செய்ய
திருஜேக்கப்ராஐ்
9442123416
காலபெருமாள்
9715907767
ஞானபாலசிங்
9003479901என்ற
எண்களில்தெடர்பு
கொள்ளவும்

Tuesday 3 January 2017

  அஞ்சலக சேமிப்பு வட்டி விகிதங்களில் 31.03.2017  வரை மாற்றம் இல்லை  என அஞ்சல் துறை அறிவிப்பு

NO CHANGE IN POST OFFICE INTEREST RATES UP TO : 31.03.2017. 

Sunday 1 January 2017

நெல்லை கோட்ட அஞ்சல் நண்பர்களுக்கு ஒரு அழைப்பு 
                                                     சிரிக்கலாம் வாங்க !
                                   புத்தாண்டு கொண்டாட்டம்--2017
நாள் 03.01.2017   செவ்வாய்   Image result for VIJAY TV KALAKKA POVATHU YAARU PICHUMANI IMAGES
நேரம் மாலை 05.30 மணி 
இடம் .பாளையம்கோட்டை HO 
 சிறப்பு சிரிப்புரை ---தோழர் ச .பிச்சுமணி ,எம் .ஏ ..
( விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் மற்றும் சூரியன் FM பெரியதம்பி)
 முழுக்க ,முழுக்க நகைச்சுவைகளை சுவைக்க வாரீர் ! வாரீர் !
 அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்   ---  SKJ ----


FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......