10 வது மாநாட்டிற்கான செயற்குழு கூட்டம்
டிசம்பர்- 4 - 2016 அன்று நடைபெற இருக்கும் 10 வது மாநாட்டிற்கான செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் வைத்து நடைபெற்றது.
கோட்ட சங்க தலைவர் திரு ஞான பாலாசிங் அவர்கள் தலைமை ஏற்றார்கள், கோட்ட செயலாளர் திரு காலப்பெருமாள் அவர்கள் ஈராண்டு அறிக்கை வாசித்து செயற்குழுவுக்காக சமர்பித்தார்கள். கோட்ட பொருளாளர் திரு முத்தையா அவர்கள் ஈராண்டு வரவு செலவு கணக்கை வாசித்து செயற்குழுவுக்காக சமர்பித்தார்கள்.
நமது 10வது கோட்ட சங்க மாநாட்டிற்கான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது
மேலும் இம்மாநாடு GDS ஊழியர்கள் இலாகா ஊழியர்களாக நமது அஞ்சல் துறை மற்றும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தும் மாநாடாக இருக்க வேண்டும் என செயலாளர் திரு காலப்பெருமாள் சிறப்புரை ஆற்றினார்கள்.
அம்பை கோட்ட செயலர் திரு ஏகாம்பரம் அவர்கள் வாழ்த்துரை ஆற்றினார்கள்.
மற்றும் JCA பேரவை திரு ஜேக்கப் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
கூட்டம், திரு நம்பி அவர்கள் நன்றி உரை ஆற்ற செயற்குழு உறுப்பினர்கள் வாழ்த்துக்களுடன் இனிதே நிறைவு பெற்றது