Monday, 21 August 2017

போராடு தோழா போராடு!!!!

போராடு --போராடு --வாழ்நாள் முழுவதும் வாழ்க்கை போராட்டம் நடத்தும் GDS தோழர்களே ! வாரம் தாண்டி வேலைநிறுத்தம் செய்வது உனக்கு புதிதல்ல --
GDS ஊழியர்களின் போராட்டம் இன்று ஆறாவது நாளை எட்டியுள்ளது .முதல்நாள் வேலைநிறுத்தம் எப்படி இருந்ததோ அப்படியே இன்றும் தொடர்கிறது .நீதான் GDS ஊழியர்களின் பாதுகாவலன் -உன்னால் மட்டும்தான் GDS ஊழியர்களுக்காக போராடும் துணிவும் -வாதாடும் வல்லமையும் முடியும் .குழம்பிய குட்டையில் உறுப்பினர் சேர்க்கையை முடிக்க நினைத்தவர்கள் நமது எழுச்சியை பார்த்து முக்காடு போட்டு அலைகின்றனர் .நமது போராட்டத்தை பார்த்து பார்த்து வாபஸ் வாங்க நினைத்த 23.08.2017 ஒருநாள் வேலைநிறுத்தத்தை வேண்ட விருப்போடு நடத்த தயங்கி வருகிறார்கள் .யாரை பற்றியும் கவலைப்படாதே !நீதான் உழைக்கும் வர்க்கம் --உன்னிடம் இருந்து தான் GDS யை மீட்டெடுக்கும் உரிமைக்குரல் ஒலிக்கும் =பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது -பேச்சுவார்த்தையின் போது நமது பொதுச்செயலாரின் நிலை உறுதிபட --உன் வேலைநிறுத்தம் மட்டும் தான் தலைவனுக்கு ஊக்கத்தையும் -உற்சாகத்தையும் கொடுக்கும் .
போராடு --போறது வாழ்நாள் முழுவதும் வாழ்க்கை போராட்டம் நடத்தும் தோழா போராட்டம் உனக்கு புதிதல்ல --போராடு --போராடு !
வாழ்த்துக்களுடன் AIGDSU NELLAI


FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......