Thursday 17 August 2017

போராடுவோம் போராடுவோம்...

போராடும் GDS தோழர்களுக்கு வீர வாழ்த்துக்கள்

கமலேஷ் சந்திரா அறிக்கையை அமுல்படுத்தக்கோரி GDS ஊழியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தம் 16.08.2017 முதல் நாடுமுழுவதும் தீயாய் பரவி வருகிறது .ஒட்டு மொத்த ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி --இந்த புரட்சி இவைகளை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாது

-RPLI பிடிக்க ED வேண்டும் -SB கணக்கு தொடங்க ED வேண்டும் -ED உரிமை கேட்டால் அது தேச குற்றமா ? அதிகாரிகள் நம் போராட்ட உண்மையையே உணர்ந்து நமக்கு மறைமுகமாக வாழ்த்துகிறார்கள் பத்திரிக்கைகள் பாராட்டுகின்றன .பல கோட்டங்களில் நமது இலாகா ஊழியர்கள் நமது போராட்டத்திற்கு எல்லா வகையிலும் ஆதரவு கரம் நீட்டுகிறார்கள் --ஆனாலும் நம்மில் சிலபேர் எதற்காகவோ பயந்து பணி செய்கிறார்கள் --சில அரசியல் அனாதைகள் நமது GDS ஊழியர்களை பொய்கதைகளை கூறி போராட்டத்தின் பாதையை திசைதிருப்பி வருகிறார்கள் .அதைகுறித்தெல்லாம் நாம் கவலைப்படாமல் மாநிலத்தில் நமது போராட்ட வீச்சை அதிகரிக்க வேண்டும் --நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது .இன்றும் போராடப்போகிறோம் --நாளையும் தொடர போகிறோம் ---நமக்கு கோரிக்கை நிறைவேறும் வரை போராட போகிறோம் --


வாழ்த்துக்களுடன் --

AIGDSU நெல்லை


FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......