3ம் நாள் வேலைநிறுத்த போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
காலை மாலை இரு வேலைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாலையில் அம்பை பகுதி தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
மாலை இலாகா உயர் அதிகாரி திருமதி உஷா சந்திர சேகர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நமது கோரிக்கைகள் வலுவாக எடுத்து வைக்கப்பட்டன, திங்கள் கிழமை வரை வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது...
முன்னதாக நமது பொது செயலாளர் திரு மகாதேவ்வையா அவர்கள் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு விஜய் அவர்களிடம் நமது கோரிக்கை மனுவை சமர்ப்பித்தார்.
இன்று நமது துறை அமைச்சரை சந்தித்து விரைவாக கமிட்டி அறிவிக்கையை அமுல்படுத்த கோரி மனு அளிக்க உள்ளார்.
இன்று மிக சிறப்பான அளவில் மகளிர் தோழர்களையும் அழைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
AIGDSU
நெல்லை கோட்டம்