திரு கமலேஷ் சந்திரா தலைமையிலான GDS கமிட்டியை உடனடியாக அமுல்படுத்தகோரி இன்று முதல் AIGDSU தேசிய சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துருந்தது.
இந்த அழைப்பை ஏற்று நெல்லை கோட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட தோழர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்
இதனை தொடர்ந்து காலை ஸ்ரீ புறம் திருநெல்வேலி தலைமை தபால் நிலையம் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்ட தலைவர் I ஞான பாலசிங் தலைமை தாங்கினார்.
வள்ளியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோட்ட செயலாளர் S. கால பெருமாள் தலைமை தாங்கினார்
அம்பை பகுதிக்கு அம்பை கிளை சங்க செயலாளர் ராஜ ராஜன் தலைமைதாங்கினார்.
வேலைநிறுத்த போராட்டத்தில் 98 சதவீத தோழர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நெல்லை அதிர்ந்தது