Thursday, 27 April 2017

GDS ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு

இலாகா ஊழியர்களுக்கு 1-1-2017 முதல் 2 சதவீத அகவிலைப்படி மத்திய அரசு வழங்கிய நிலையில் , 7 வது ஊதிய குழுவில் சேராத பிற ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் இன்று அவர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி அறிவிக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் அகவிலைப்படியானது 132% லிருந்து 136 % க உயர்ந்துள்ளது. இதன் மூலம் மூன்று லட்சம் GDS ஊழியர்கள் பயனடைவார்கள், 1-1-2017 முதல் இந்த உயர்வு நடைமுறைக்கு வரும் என ஆனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஜூன் 2016 முதல் டிசம்பர் 2016 க்கான அகவிலைப்படி 7% வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படிக்கு

ஞான பாலசிங்
கோட்ட தலைவர்

கால பெருமாள்
கோட்ட செயலாளர்

நெல்லை கோட்டம்



Officiating பணிபுரியும் GDS தோழர்களுக்கு புதிய ஊதியம்

Postman/MTS பணியிடங்களில் Officially பணிபுரியும் GDS தோழர்களுக்கு 01.01.2016 முதல் புதிய சம்பள விகிதப்படி ஊதியம் அளித்திட இன்று இலாகா ஆணை வெளியிட்டுள்ளது.
Order No: 7-9/2016 dt 26.04.17.

GDS தோழர்களுக்கான DA 4% ஆணை நாளை (27.04.2017) வெளியிடப்படும்.


இப்படிக்கு
S. கால பெருமாள்
நெல்லை கோட்டம்



Monday, 24 April 2017

காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

திரு கமலேஷ் சந்திராவின் GDS கமிட்டி 2016 ஐ நமது பொது செயலாளர் திரு மகாதேவ்ய்யா கொடுத்த மாற்றங்களோடு விரைவாக அமுல்படுத்த பரிசீலிக்கப்படும் என எழுத்து பூர்வமான வாக்குறுதியை இலாகா அளித்திருப்பதாகவும் அதனால் நமது பொது செயலாளர் அறிவித்த காலவரையற்ற வேலைநிறுத்ததை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக நமது மத்திய சங்கம் அறிவித்துள்ளது.

தோழமையுடன்
S. கால பெருமாள்
கோட்ட செயலாளர்
நெல்லை கோட்டம்




காலவரையற்ற வேலை நிறுத்தம்

நமது பொது செயலாளர் திரு மஹாதேவ்ய்யா கோரிய மாற்றங்களோடு திரு கமலேஷ் சந்திரா அவர்களின் GDS கமிட்டி அறிக்கை 2016 உடனடியாக அமுல்படுத்த கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நாம் நடத்திய பிறகும் மனம் இறங்காது GDS ஊழியர்களை அடிமைப்படுத்தும் விதமாக இன்னமும் கமிட்டி அறிக்கையை அமுல்படுத்தமால் காலம் தாழ்த்தி நம் வயிற்றில் அடிக்கும் அஞ்சல் துறைக்கு நமது வலிமையை உணர்த்தும் விதமாக வரும் செவ்வாய்க்கிழமை 25-04-2017 காலை 06.00 மணி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்திற்கு  நமது பொது செயலாளர் திரு மஹாதேவய்யா அழைப்பு விடுத்துள்ளார்.


தோழர்களே நமக்கான அடிப்படை உரிமைகளை பெற்றிட தொழிலாளர்களின் உச்ச கட்ட போராட்டமான வேலை நிறுத்த போராட்டத்தில் அனைவரும் பங்குபெற்று  நமது உரிமைகளை மீட்டெடுப்போம்.

தோழர்களே இந்த செய்தியை அணைத்து தோழர்களுக்கும் எடுத்து கூறி நமது போராட்டத்தில் பங்குபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நமது உரிமை
நமது போராட்டம்
நமது வெற்றி

உறுதி செய்ய அனைவரும் ஒன்று சேருவோம்
நமது ஒற்றுமையை இந்த உலகத்திற்கு பறைசாற்றுவோம்
அடிமை விலங்கிணை
உடைத்தெறிவோம்.


சிவப்பு கைகள் சேரட்டும்,
வெற்றி நம்மை சேரட்டும்

போராட்ட வாழ்த்துகளுடன்
திரு ஞான பாலசிங்
கோட்ட தலைவர்

திரு கால பெருமாள்
கோட்ட செயலாளர்

நெல்லை கோட்டம்



Thursday, 6 April 2017

பாராளுமன்றம் நோக்கிய பேரணி

இன்று (06.04.2017) பாராளுமன்றம் நோக்கிய பேரணி தொடங்கும் முன் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற விளக்க உரை.



Wednesday, 5 April 2017

பாராளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி

திரு கமலேஷ் சந்திரா தலைமையிலான GDS கமிட்டி 2016 ன் சாதகமான பரிந்துரையோயோடு 18-3-2017 அன்று ஆய்வு கமிட்டியிடம் நமது பொது செயலாளர் திரு மஹாதேவையா அவர்கள் கொடுத்த மாற்றங்களோடு உடனடியாக அமுல்படுத்தகோரி மூன்று கட்ட போராட்டங்களுக்கு நமது பொது செயலாளர் திரு மஹாதேவையா அழைப்பு விடுத்திருந்தார்.

முதல் கட்ட போராட்டமாக கடந்த 10-03-2017 அன்று சைக்கிள் பேரணி நடைபெற்றது.

அதன் பின்னர் இரண்டாம்  கட்ட போராட்டமாக 28-3-2017 கோட்ட அளவில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மூன்றாம் கட்டமாக நாளை 06-04-2017 பாராளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி நடைபெற உள்ளது.

பேரணியில் முடிவில் ஜந்தர் மந்திரில் அமைந்துள்ள மேடையில் நமது பொது செயலாளர் வீர உரை ஆற்றுகிறார். பேரணியில் நாடு முழுவதுமுள்ள 23 வட்டங்களில் பணிபுரியும் GDS தோழர்கள் 10,000 க்கும் அதிகமானோர் கலந்துகொள்கிறார்கள்.
டெல்லிக்கு வருகைதரும் தோழர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேரணியில் இறுதியில் அஞ்சல் துறை செவி சாய்க்கவில்லை  எனில் உச்ச கட்ட போராட்டமான காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படிக்கு

தோழர் ஞான பாலசிங்
கோட்ட தலைவர்

தோழர் கால பெருமாள்
கோட்ட செயலாளர்

AIGDSU நெல்லை கோட்டம்


ஆர்ப்பாட்டம் முழு வெற்றி

04-04-2017செவ்வாய்க்கிழமை நெல்லை கோட்ட நிர்வாகம் மாதாந்திர பேட்டிகளில் உறுத்தியளித்தது போல் நமது GDS கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புறந்தள்ளியதை கண்டித்து கூட்டு ஆர்ப்பாட்டம் மாலை 6 மணியளவில் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்திற்கு P3  தோழர் குருசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் AIGDSU கோட்ட தலைவர் GDS ஊழியர்களின்  கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றும் கோட்ட நிர்வாகத்தை கண்டித்தும் நமது அடிப்படை கோரிகைகளான

1.Seniority list வெளியிட கோரியும்

2. GDS ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்ககோரியும்

3. RPLI இன்சென்டிவை உடனே வழங்ககோரியும்

வீரஉரை ஆற்றினர்.

கூட்டு ஆர்ப்பாட்டத்தில் NFPE செயலாளர் "நெல்லை கட்டபொம்மன்"  GDS ஊழியர்களின் பாதுகாவலர் தோழர் ஜேக்கப் ராஜ் சிறப்புரை ஆற்றினார். நெல்லை கோட்ட நிர்வாகத்தின் மாற்றான் தாய் சிந்தனையை கண்டித்தார்

பல பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான தோழர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.

தோழர் வண்ணமுத்து நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் பெரும் வெற்றியடைந்தது.


Tuesday, 4 April 2017

மாபெரும் ஆர்ப்பாட்டம்

இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்

நமது நெல்லை கோட்ட சங்கம,் கோட்ட நிர்வாகத்திடம் பல மாதாந்திர பேட்டிகளில் கோரிக்கைகளை முன்வைத்து, அதற்கு உறுதி அளித்த கோட்ட நிர்வாகம் தற்போது அதை நிறைவேற்ற தவறிய கோட்ட நிர்வாகத்தை கண்டித்து இன்று 4-4-2017  மாலை 6 மணியளவில் பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன்னால் வைத்து மாபெரும் கூட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது, தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் வெற்றி பெற அழைக்கிறோம்.

ஆர்ப்பாட்ட கோரிக்கைகள்

1. Seniority list வெளியிட கோரியும் வெளியிடாததை கண்டித்து

2. GDS ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதாக உறுதியாளித்துவிட்டு அடையாள அட்டை வழங்காத்தை கண்டித்து

3. RPLI இன்சென்டிவை உடனே வளங்ககோரி

மேற்கண்ட கோரிக்கை வேண்டுவோர் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் தவறாது கலந்து கொள்ளவும்.

இப்படிக்கு

தோழர் ஞான பாலசிங்
AIGDSU கோட்ட தலைவர்
நெல்லை கோட்டம்


FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......