நமது பொது செயலாளர் திரு மஹாதேவ்ய்யா கோரிய மாற்றங்களோடு திரு கமலேஷ் சந்திரா அவர்களின் GDS கமிட்டி அறிக்கை 2016 உடனடியாக அமுல்படுத்த கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நாம் நடத்திய பிறகும் மனம் இறங்காது GDS ஊழியர்களை அடிமைப்படுத்தும் விதமாக இன்னமும் கமிட்டி அறிக்கையை அமுல்படுத்தமால் காலம் தாழ்த்தி நம் வயிற்றில் அடிக்கும் அஞ்சல் துறைக்கு நமது வலிமையை உணர்த்தும் விதமாக வரும் செவ்வாய்க்கிழமை 25-04-2017 காலை 06.00 மணி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்திற்கு நமது பொது செயலாளர் திரு மஹாதேவய்யா அழைப்பு விடுத்துள்ளார்.
தோழர்களே நமக்கான அடிப்படை உரிமைகளை பெற்றிட தொழிலாளர்களின் உச்ச கட்ட போராட்டமான வேலை நிறுத்த போராட்டத்தில் அனைவரும் பங்குபெற்று நமது உரிமைகளை மீட்டெடுப்போம்.
தோழர்களே இந்த செய்தியை அணைத்து தோழர்களுக்கும் எடுத்து கூறி நமது போராட்டத்தில் பங்குபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நமது உரிமை
நமது போராட்டம்
நமது வெற்றி
உறுதி செய்ய அனைவரும் ஒன்று சேருவோம்
நமது ஒற்றுமையை இந்த உலகத்திற்கு பறைசாற்றுவோம்
அடிமை விலங்கிணை
உடைத்தெறிவோம்.
சிவப்பு கைகள் சேரட்டும்,
வெற்றி நம்மை சேரட்டும்
போராட்ட வாழ்த்துகளுடன்
திரு ஞான பாலசிங்
கோட்ட தலைவர்
திரு கால பெருமாள்
கோட்ட செயலாளர்
நெல்லை கோட்டம்