Thursday 29 December 2016

சென்னை அதிர்ந்தது

சென்னை அதிர்ந்தது 


GDS  கமிட்டி அறிக்கையை வெளியிடக்கோரி இன்று நாடு முழுவதும் உள்ள சர்க்கிள் அலுவலங்கள் முன்னால் நமது தோழர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஏற்கனவே 22-12-2016 அன்று கோட்ட அலுவலகங்கள் முன்னால்  நடைபெற்ற ஆர்ப்பாட்டம் பெரும் வெற்றியை தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டம் சர்க்கிள் அலுவலங்கள் முன்னால்  நடைபெற்றது குறிப்படத்தக்கது.

சென்னை சர்க்கிள் அலுவலகம் முன்னால்  இன்று நமது தமிழக AIGDSU  தோழர்கள் 1000 துக்கும்  மேற்பட்ட தோழர்கள் சமுத்திரமென திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இலாகாவும் மத்திய அரசும் வெளிப்படைத்தன்மையுடன் நடக்கவேண்டும் என்றும் ,மௌனம் களைத்து உடனடியாக திரு கமலேஷ் சந்திரா தலைமையில் சமர்ப்பித்த GDS  PAY  கமிட்டி அறிக்கையை வெளியிடவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்திய அஞ்சல் துறை வரலாற்றில் ஒரு சங்கம் தனித்து 1000 துக்கும்  மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது இதுவே முதல் முறையாகும். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் நமது தோழர்களின் முழக்கத்தால் சென்னையே அதிர்ந்தது. ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி அடைந்தது.  

தோழமையுடன் 
தோழர்: கால பெருமாள் 
நெல்லை கோட்டம்

ஆர்ப்பாட்ட காட்சி தொகுப்புகள் 







20-11-2016 அன்று நடைபெற்ற MTS  தேர்விற்கான (APS  மற்றும் NON -APS ) திருத்தப்பட்ட இறுதி விடைத்தாள் FINAL KEY தமிழக அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.




மத்திய சங்கம் துறை செயலாளருக்கும்  துறை மந்திரிக்கும் பிரதம மந்திரிக்கும் GDS  கமிட்டியை வெளியிட கோரி கடிதம் அனுப்புமாறு கோரியுள்ளது. கடிதத்தின் மாதிரி வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

DRAFT LETTER COPY TO HON’BLE MOS (C) AND SECRETARY POSTS
ALL INDIA GRAMIN DAK SEVAKS UNION (AIGDSU)
To
The Secretary
Department of posts,
Dak Bhavan,
New Delhi- 110001
2.   Shri Manoj Sinha,
      Hon’ble State Communication Minister (IC),
      Govt. of India
      Sanchar Bhavan,
      New Delhi-110001
Sub:- Supply of a copy of report of Sri Kamlesh Chandra GDS committee
           submitted on 24-11-2016.
Respected Sir,
        The report of Sri Kamlesh Chandra GDS committee which was submitted on 24-11-2016. But a copy has not been supplied to us which Sri Chandra said would be supplied by you. This was the first time when the report of an GD committee has not been supplied to the union which represents 2.60 lakhs GDS employees and is the sole recognized union of the GDS employees. The government swears by transparency but this withholding of the report of the GDS committee from the union of such employee to whom it applies is opposed to transparency.
Kindly supply a copy of Sri Kamlesh Chandra GDS committee report to the All India GDS employees union CHQ early.
With regards
                                                                              Yours faithfully,
                                                                                Circle Secretary
          Dated: 29.12.2016                                 
Copy forwarded all the Circle /Division /Branches Secretaries and CHQ office bearers. They are requested to send emails to the Hon’ble minister communication on email ID mosc-office@gov.in and the secretary Dept. of posts on email ID secretary-posts@indiapost.gov.in Text of the letter.
GDS  கமிட்டியை வெளிப்டுவதில் தாமதத்தை தவிர்த்து இலாகாவும் அரசும் வெளிப்படை தன்மையோடு நடந்து கொள்ளவேண்டும் எனவும் 2.6 லட்சம்  GDS  தோழர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என தேசிய செயலாளர் தோழர் மஹாதேவையா இன்று இலாகாவுக்கு எழுதிய கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். 


இன்று PMG  அலுவலகம் முன்னால்  நடைபெறும் ஆர்ப்பாட்டம் பெரும் வெற்றி பெற நெல்லை கோட்டம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது

இங்ஙனம்
தோழர்: கால பெருமாள்
நெல்லை கோட்ட செயலாளர்

Wednesday 28 December 2016

வெல்லட்டும் --GDS ஊழியர்களின்  நாடு தழுவிய தர்ணா -வெல்லட்டும் 
 அன்பார்ந்த தோழர்களே !
     GDS கமிட்டி அறிக்கையை வெளியிட அரசு /அஞ்சல்வாரியம் தொடர்ந்து மெத்தனம் காட்டிவருகிறது .இந்த அநீதியை எதிர்த்து AIGDSU சங்கம் மட்டும் தான் சிங்கம் போல் எதிர்த்து நிற்கிறது .ஏனைய NFPE ,FNPO சங்கங்கள் ஏனோ அரசுக்கு சாமரம் வீசி வருகிறது .30.12.2016 குள் முடிவு எடுக்கப்படும் என்று இலாகா செயலர் NFPE .FNPO சங்கங்களிடம் சொன்னதாக நாகூசாமல் அறிக்கைவிடும் தலைவர்களை GDS ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
AIGDSU சங்கம் எப்பொழுதெல்லாம் அரசுக்கு எதிராக போராடுகிறதோ அப்பொழுதெல்லாம் இந்த NFPE ,FNPO தலைவர்கள் GDS கோரிக்கைகளை கொச்சைப்படுத்தும் வகையில் அறிக்கை விடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் .
GDS ஊழியர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை --உபத்திரம் செய்யாமல் இருந்தால் போதும் --AIGDSU நெல்லை  

REVERTING OF NPS EMPLOYEES TO OLD PENSION SCHEME FROM THE DATE OF ARISING VACANCY - GOVT. WILL FILE APPEAL IN THE HIGH COURT AGAINST CAT JUDGMENT: RAJYASABHA Q&


GOVERNMENT OF INDIA
MINISTRY OF FINANCE
RAJYA SABHA

UNSTARRED QUESTION NO-1506
ANSWERED ON-29.11.2016

Revision of NPS employees to Old Pension Scheme

1506 . Shri Neeraj Shekhar

(a) whether Central Administrative Tribunal, Ernakulam bench has ordered the Central Government to revert the employees who had joined after 1st January, 2004 under NPS to Old Pension Scheme and has observed that date of vacancy should be the basis for inclusion under NPS or Old Pension Scheme instead of date of joining, if so, details thereof;

(b) whether Government has reverted them to Old Pension Scheme, if so, details thereof, if not, reasons therefore; and

(c) whether Government would issue notification for all Central/State Governments and Autonomous Organizations employees in this regard, as per the above orders, if not reasons therefore?

ANSWER

The Minister of State in the Ministry of Finance

(a) The Hon’ble Central Administrative Tribunal (CAT) in its judgment has declared that the applicants of Original Application No. 20/2015 are deemed to have been appointed from the date of vacancy arose and they shall be included in the CCS (Pension) Rules, 1972.

(b) No Sir. It has been decided to file a petition before the Hon’ble High Court of Kerala against the orders of Hon’ble CAT in Original Application No. 20/2015.

(c) No Sir, as it has been decided to file a petition before the Hon’ble High Court of Kerala against the orders of Hon’ble CAT in Original Application No. 20/2015.

Tuesday 27 December 2016

கமிட்டி குறித்து புதிய செய்தி

நமது தேசிய சங்க பொது செயலாளர் தொடர்ந்து இலாகவுக்கு அழுத்தம் கொடுத்து கமிட்டி அறிக்கையை வெளியிட அணைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார் இது குறித்து இன்றும் ஒரு குறிப்பு அடங்கிய கடிதத்தை இலாகாவிடம் சமர்பிக்கிறார். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அறிக்கை வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது இருப்பினும் பிம்ஜி அழுவலுகம் முன்னால் நடைபெற இருக்கும் போராட்டத்திற்கு தயாராக இருக்கும் படி நமது பொது செயலாளர் திரு மஹாதேவையா தெரிவித்துள்ளார்

இப்படிக்கு
திரு கால பெருமாள்
கோட்ட செயலாளர்
நெல்லை கோட்டம்

தோழர்களே

GDS ஊழியர்களின் 7வது சம்பளக்கமிஷன் கமிட்டியின் அறிக்கையை வெளியிடக்கோரி அகில இந்திய சங்கத்தின் ஆணைக்கிணங்க கடந்த 22-12-2016 மாலை அன்று பாளை தலைமை அஞ்சலக அலுவலகம் முன் மாலைமிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

மத்திய சங்க வேண்டு கோளுக்கிணங்க 29-12-2016 வியாழன் அன்று சென்னையில் சர்க்கில் ஆபீஸ் முன்னால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் சங்கத்தின் நெல்லை கோட்டச் செயலாளர்    தோழர் எஸ்.காலபெருமாள் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். 9715907767

இங்ஙனம்
தோழர் கால பெருமாள்
கோட்ட செயலாளர்

Saturday 24 December 2016

நெல்லை கோட்கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் கிறிஸ்துமஸ்  வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது

Friday 23 December 2016

 GDS PAY கமிட்டியை இலாகாவும் மத்திய அரசும் வெளியிட கோரி 22-12-2016 மாலை 6:00 மணியளவில் நெல்லை கோட்டம் பாளையம்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது


ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் திரு ஞானபாலசிங் தலைமை தாங்கினார் அம்பை கிளை கோட்ட செயலாளர் திரு ஏகாம்பரம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார் நெல்லை கோட்ட செயலாளர் திரு காலப்பெருமாள் வீர உரை ஆற்றினார் அம்பை கோட்ட கிளை தலைவர் திரு ராஜராஜன் சிறப்புரை ஆற்றினார். P 4 அஞ்சல் தோழர் திரு பாட்சா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்


NCA  பேரவை - நெல்லை   கட்டபொம்மன் திரு ஜேக்கப் ராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் இன்னும் பிற சங்க தோழர்கள் ஓய்வு பெற்ற தோழர்கள் நமது சங்க தோழர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்


தோழர் S.ராம்குமார் முடிவுரை வாசிக்க ஆர்ப்பாட்டம் பெரும் வெற்றியுடன் நிறைவு பெற்றது


ஆர்ப்பாட்ட வீடியோ காட்சியை  நேரடியாக facebook  வழியாக ஒளிபரப்பட்டது


ஆர்ப்பாட்ட புகை படங்கள் வாட்ஸாப்ப் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது


சங்க செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள
வெப்சைட்:  gdsnellai.blogspot.com

facebook group : rural postal employees union nellai

whatsappgroup இல் இனைய   - GDS Tirunelveli  Division - 

தோழர் S.ராம்குமார் - +917708485500

தோழமையுடன்
காலப்பெருமாள்

கோட்ட செயலாளர்










Thursday 22 December 2016

இன்று மாலை கோட்ட அலுவலகம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்

அலை கடலென ஆர்ப்பரித்து வாரீர்...அடிமை தழையை களைய வாரீர்...ஏகாதிபத்தியம் ஒழிக்க வாரீர்...

உரிமையை நிலை நாட்ட வாரீர் ...


GDS கமிட்டியை வெளியிடாத நிர்வாகத்தையும் மத்திய அரசையும் கண்டித்தும் 
நமது பிற கோரிக்கைகள் வென்று எடுக்கவும் 


அணிதிரண்டு வாரீர் 

தோழர்களே 

அணி திரண்டு வாரீர் 


 இன்று மாலை கோட்ட அலுவலகம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் 


நெருப்பாய்  எரியும் நமது தோழமை தீ அதை இந்த நிர்வாகத்திற்கும் அரசுக்கும் காட்டுவோம் நமது ஒற்றுமையை நிலைநாட்டுவோம் 


சிவப்பு கைகள் சேரட்டும் நமது வாழ்வு மலரட்டும் 

Wednesday 21 December 2016

டிசம்பர் 22 அன்று நடைபெரும் மாபெரும் தர்னா குறித்து கோரிக்கைகள் அடங்கிய நோட்டீஸ் உங்கள் பார்வைக்கு

Monday 19 December 2016

அன்பார்ந்த தோழர்களே !
   GDS கமிட்டி அறிக்கை வெளியிடுவதில் உள்ள தயங்களையும் -தாமதத்தையும் பார்க்கும் பொழுது நிச்சயம் GDS ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
GDS களின் துரதிஷ்டம் நல்ல பரிந்துரைகளை நாம் பெரும் பொழுதெல்லாம் 
 ஊழியர் நலன் விரும்பாத ஒரு அரசு இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை .ஜஸ்டிஸ் தல்வார் கமிட்டி கொடுத்த பல சாதகமான பரிந்துரைகளை அன்றைய BJP அரசு அமுல்படுத்த முன்வரவில்லை .இன்று அதற்குமேல் GDS கமிட்டி பரிந்துரையை  வெளியிடவே மனமில்லை .அறிக்கையை படித்தவுடனே என்ன நடந்திருக்கும் என்று தெரியவில்லை .ஆனால் பரிந்துரை நமது சங்கங்களின் கருத்துக்களை கேட்டு வழங்கப்பட்ட அறிக்கையாகத்தான் இருக்கும் என்பதில் அச்சமில்லை .
  தொழிலாளர்கள் கையேந்தும் பிச்சைக்கார்கள் அல்ல என்ற பாலபாடத்தை மனதில் கொள்வோம் .யார் போராடினாலும் --எந்த பிரிவு ஊழியர்கள் போராடினாலும் --அங்கே எங்கள் தோழமை துணை நிற்கும் .
                                             AIGDSU NELLAI
                                                       

                           வாழ்த்துகிறோம் 

நெல்லை கோட்டத்தில் GDS இல் இருந்து MTS ஆக பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பெற்ற  தோழர்களை நெல்லை AIGDSU வாழ்த்துகிறது 

M .காளிராஜன்  (OBC)   GDSMD மன்னார்புரம் --திசையன்விளை 
R .ஆன்ட்ருஸ்  (  UR ) GDSMD  பொட்டல் புதூர் 

  இவர்களுக்கு இன்று முதல் (19.12.2016 ) பாளையில் பயிற்சி வகுப்புகள்தொடங்குகின்றன

Saturday 17 December 2016

நாளை மாநகராட்சி தபால்களை பட்டுவாடா செய்ய விருப்பமுள்ளவர்கள் மட்டும்  நாளை வேலைக்கு வரலாம் என கண்காணிப்பாளர் உத்தரவு

கோட்ட கிளை செயலர் கவனத்திற்கு

கீழே குறிப்பிட்டுள்ள Memorandam தை 22.12.2016 அன்று ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு கீழே குறிப்பிட்டுள்ள Email விலாசத்திற்கு இலாகா அமைச்சருக்கு அனுப்பி வைக்கவும்.

மத்திய அரசே !அஞ்சல் வாரியமே !
 GDS கமிட்டி அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏன் ?
21 நாட்களுக்கு மேல் ஆகிறது --கோழி  அடைகாத்தால்  கூட 21 நாளில் குஞ்சு பொறித்திருக்கும் --
அறிக்கை எனும் முட்டைக்குள்   குஞ்சு இருக்கிறதா ?அல்லது வெத்து முட்டையா ? வெளிக்கொணர வேண்டும் 

இதை கண்டித்து நமது AIGDSU சங்கத்தின் அறைகூவலை வெற்றிகரமாக நடத்திடுவோம் .
22.12.2016 கோட்ட அலுவலகங்கள் முன்பு தர்ணா 
29.12.2016 மாநில நிர்வாக அலுவலகங்கள் முன்பு தர்ணா 
 இதன் அடிப்படையில் நெல்லையில் வருகிற 22.12.2016 அன்று GDS ஊழியர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .அன்பார்ந்த எங்களருமை GDS ஊழியர்களே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வீர் !
                                                ஆர்ப்பாட்டம் 
நாள் --22.12.2016 வியாழன்  
நேரம் மாலை 6 மணி 
இடம் -நெல்லை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு 
         
           அனைவரும் வாரீர் !வாரீர் !
                                 போராட்ட வாழ்த்துக்களுடன் 
I.ஞான பாலாசிங்                                      SK .காள பெருமாள் 
கோட்ட தலைவர்                                     கோட்ட செயலர் 

A.ராஜராஜன்                                                    S.ஏகாம்பரம் 
அம்பை --கிளை தலைவர்                   அம்பை --கிளை செயலர் 

Wednesday 14 December 2016

22-12-2016 அன்றுதேசம் முழுவதும் கோட்ட அலுவலகங்கள் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம்

22-12-2016 அன்று தேசம் முழுவதும்   கோட்ட அலுவலகங்கள் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் 

ஆர்ப்பரித்து எழுந்திருங்கள் தோழர்களே!பெரும் போராட்டத்திற்கு தயாராகுங்கள் !

இனியும் பொறுத்திருக்க முடியாது?GDS கமிட்டி அறிக்கையை  மத்திய அமைச்சரிடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?


ஏற்கனவே மூன்று வாரங்கள் கடந்து விட்டது...இன்று அமைச்சரை நாங்கள் சந்தித்து பேசினோம், பேச்சுவார்த்தை எதுவும் கனியவில்லை...


இதுபோன்ற செயலை நாம் வன்மையாக கண்டிப்போம்...பிரதம மந்திரிக்கும் நமது துறை தலைவருக்கும் நாம் ஒன்றிணைந்து ஈமெயில் தபால் அனுப்புவோம்


மூன்று வாரங்களாகியும் GDS கமிட்டி அறிக்கையை வெளியிடாமல் காலம் தாழ்த்துவது நம்மை ஒடுக்கும் செயல்...


நிர்வாகமும் அரசும் நமது கோரிக்கைக்கு செவி சாய்த்திட ஒன்றிணைந்து  போராடுவோம் 


2.6 லட்சம் GDS தோழர்களின் வாழ்வாதாரம் இது, அவர்கள் நம்மை அடக்கி ஒடுக்கும் முன் திமிறி எழுந்து நமது பலத்தை நிரூபிப்போம் 


தோழர்களே ஒன்று திரளுங்கள் வரும் 22/12/2016 - வியாழக்கிழமை தேசம் முழுவதும்   கோட்ட அலுவலகங்கள் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வோம். அடிமை தழையை  அகற்றிடுவோம் நமது வாழ்வின் இலட்சியங்களை வென்றிடுவோம் 


சிவப்பு கைகள் ஒன்று சேரட்டும் 

வெற்றி  நம் கைகளுக்கு  வந்து சேரட்டும் 

 தோழமையுடன் மஹாதேவய்யா 

Saturday 10 December 2016

நெல்லை கோட்ட மாநாடு
       நெல்லை கோட்ட 9வது மாநாடும், அம்பை கிளை 9வது கிளை மாநாடும் இணைந்து 04.11.2016 அன்று பாளையம்கோட்டை அஞ்சலகத்தில் வைத்து தோழர் ஞானபாலசிங் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  அம்பை செயலர் தோழர் ஏகாம்பரம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். நிர்வாகிகள் தேர்தலை அகில இந்திய தலைவர் தோழர் M இராஜாங்கம் அவர்கள் நடத்தி வைத்தார்.
    மாநில செயலர் A இஸ்மாயில் மாநில சங்க ஆலோசகர் தோழர் R ஜான்பரிட்டோ NCA பேரவை செயலரும், P3 சங்க மாநில உதவி செயலருமான தோழர் S K ஜேகப் ராஜ், P4 கோட்ட செயலர் S K பாட்சா, முன்னாள் முதன் மண்டல செயலர் K குப்புசாமி, கோவில்பட்டி கோட்ட செயலர் M பூராஜா, தூத்துக்குடி கோட்ட செயலர் A செல்வராஜ், கோவில்பட்டி கிளை செயலர் U பிச்சையா, சங்கரன்கோவில் கிளை செயலர் G முருகேசன், குமரி கோட்ட தலைவர் V சுகுமாரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கீழ்கண்ட நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
நெல்லை கோட்டம் 
தலைவர்:    I ஞானபாலசிங்
                        GDS BPM, மனப்படை வீடு- 627353
செயலர்:      S கால பெருமாள்
                        GDS MD, நாவல் பேஸ்-627119.
பொருளாளர்: A நம்பி
                             GDS BPM, V M சத்திரம்-627601.
மகிளா கமிட்டி அமைப்பாளர்: M அம்பிகா
                                                              GDS BPM, காட்டரங்குளம் PO - 627201.
அம்பை கிளை நிர்வாகிகள் 
தலைவர்: A ராஜராஜன்
                     GDS MD/MC, கோடாரான்குளம் BO 627416
செயலர்: S ஏகாம்பரம்
                    GDS MD, பாப்பான்குளம் BO 627423
பொருளாளர்: A ராஜேந்திரன்
                            GDS MD, பொட்டல்புதூர் 627423


Friday 9 December 2016

முக்கிய அறிவிப்பு

மிலாடி நபி விடுமுறை 12-12-2016 திங்கள் கிழமை 13-12-2016 செவ்வாய் கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது

Wednesday 7 December 2016

Wednesday, December 7, 2016

GDS COMMITTEE REPORT



GDS COMMITTEE REPORT 
அன்பார்ந்த தோழர்களே !
மிலாடி நபி --விடுமுறை 13.12.2016 (செவ்வாய்) பதில் 12.12.2016 திங்கள் கிழமைக்கு மாற்றம்

MOST IMMEDIATE
F.NO.12/18/2016-JCA2
Government of India
Ministry of Personnel Public'Grievances and Pensions
Department of Personnel and Training
JCA Section
North Block, New Delhi
Dated the 7 December, 2016

Sub: Change of date of holiday on account of Milad-Un-Nabi or Id-E-Milad during 2016 for all Central Government administrative offices located at Delhi / New Delhi.

As per list of holidays circulated vide this Ministry’s O.M.No.l2 / 7 / 2015-JCA-2 dated the 11th June, 2015, the holiday on account of Milad-Un-Nabi or Id-E-Milad falls on Tuesday the 13th December, 2016. It has been brought to notice of this Ministry that in Delhi Milad-Un-Nabi or Id-E-Milad will be celebrated on 12th December, 2016. Accordingly, it has been decided to shift the Milad-Un-Nabi or Id-E-Milad holiday to 12th December, 2016 in place of 13th December, 2016 as notified earlier, for all Central Government administrative offices at Delhi / New Delhi.

2. For Offices outside Delhi / New Delhi the Employees Coordination Committees or Head of Offices (where such Committees are not functioning) can decide the date depending upon the decision of the concerned State Government.

Hindi version will follow.


(DK. Sengupta)
Deputy Secretary JCA)

Tuesday 6 December 2016

தோழர்கள் டால்வி போஸ்ட்மேன் பாளை மற்றும் சாய்பாபா PA தென் சென்னைகோட்டம் ஆகியோரின் தந்தையாரும் /பிரபல சட்டவல்லுனரும் முன்னாள் SPOS ஆன   தோழர் M .பேச்சிமுத்து அவர்களுக்கு நினைவாஞ்சலி கூட்டம் 
நாள் 06.12.2016   இடம் வெள்ளைக்கோயில் பாளை 
தலைமை தோழர் SN .சுப்பையா மாவட்ட செயலர் மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நெல்லை 
தோழர்கள் M .மாலிக் ஆசிரியர் கலங்கரைவிளக்கு ,
தோழர் SK .ஜேக்கப் ராஜ் NFPE நெல்லை ,சண்முகசுந்தர ராஜா AIPRPA ஞான பாலசிங் தலைவர் AIGDSU நெல்லை உள்ளிட்ட முன்னணி தோழர்கள் கலந்துகொண்டு மறைந்த தோழரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள் 

தமிழக முதல்வர் திரு ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவை முன்னிட்டு துக்கம் அனுசரிக்கும் விதமாக இன்று (06-12-2016) ஒரு நாள் மட்டும் தமிழக அஞ்சல் துறைக்கு விடுமுறை விடப்படுகிறது.

நமது முது நிலை கண்காணிப்பாளர் மற்றும் NCA  பேரவை திரு ஜேக்கப் ராஜ் அவர்கள் வாட்ஸாப்ப் மற்றும் போன் கால் மூலம் குடுத்த தகவலின் அடிப்படையில் இந்த செய்தி உங்களக்கு தரப்படுகிறது. மற்ற தோழர்களுக்கு உடன் பகிரவும் 

நமது முது நிலை கண்காணிப்பாளர் திரு V.P. சந்திரசேகர் வாட்ஸாப்ப் தகவல் கீழே 

In pursuance of the orders communicated dte letter and om no.456 dated 03.01.1987 it is hereby declared that today (i.e) 06.12.2016 is a local holiday for tamilnadu on account of Chief minister`s death eod instructions will follow

இரும்புப் பென்மனியாம்   தமிழக முதல்வர் மறைவிற்கு கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது

Monday 5 December 2016

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......