Monday 19 December 2016

அன்பார்ந்த தோழர்களே !
   GDS கமிட்டி அறிக்கை வெளியிடுவதில் உள்ள தயங்களையும் -தாமதத்தையும் பார்க்கும் பொழுது நிச்சயம் GDS ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
GDS களின் துரதிஷ்டம் நல்ல பரிந்துரைகளை நாம் பெரும் பொழுதெல்லாம் 
 ஊழியர் நலன் விரும்பாத ஒரு அரசு இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை .ஜஸ்டிஸ் தல்வார் கமிட்டி கொடுத்த பல சாதகமான பரிந்துரைகளை அன்றைய BJP அரசு அமுல்படுத்த முன்வரவில்லை .இன்று அதற்குமேல் GDS கமிட்டி பரிந்துரையை  வெளியிடவே மனமில்லை .அறிக்கையை படித்தவுடனே என்ன நடந்திருக்கும் என்று தெரியவில்லை .ஆனால் பரிந்துரை நமது சங்கங்களின் கருத்துக்களை கேட்டு வழங்கப்பட்ட அறிக்கையாகத்தான் இருக்கும் என்பதில் அச்சமில்லை .
  தொழிலாளர்கள் கையேந்தும் பிச்சைக்கார்கள் அல்ல என்ற பாலபாடத்தை மனதில் கொள்வோம் .யார் போராடினாலும் --எந்த பிரிவு ஊழியர்கள் போராடினாலும் --அங்கே எங்கள் தோழமை துணை நிற்கும் .
                                             AIGDSU NELLAI
                                                       

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......