25-03-2017 சனிக்கிழமை மாலை 6:00 மணியளவில் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் வைத்து நமது AIGDSU நெல்லை கோட்ட சங்கத்தின் செயற்குழு கூடியது.
கூட்டத்திற்கு மண்ணூர் எட்டங்குளம் BO BPM திரு வேலுசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.
- கூட்டத்தில் நெல்லை கோட்ட GDS ஊழியர்களுக்கு ID கார்டு வழங்க கோரியும்,
- 2013 கு பிறகு நமது கோட்ட GDS ஊழியர்கள் பிடித்த RPLI பாலிஸிகளுக்கு கமிஷன் வழங்க கோரியும்,
- நெல்லை கோட்ட GDS ஊழியர்களின் சீனியரிட்டி லிஸ்ட் வெளியிடக்கோரியும்
- மற்றும் MTS / தபால்காரராக பணியாற்றும் நமது GDS ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவில் பரிந்துரைத்த புதிய ஊதியம் வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மத்திய சங்க அறைகூவலுக்கு இனங்க திரு கமலேஷ் சந்திரா தலைமையிலான GDS கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்த கோரி திருநெல்வேலி கோட்ட அலுவலகம் முன்னால் வரும் 28-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 06.00 வரை மாபெரும் தர்ணா நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
சென்ற கோட்ட கண்காணிப்பாளர் உடன் நடந்த மாதாந்திர பெட்டியில் நமது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதையும் அதற்கு நமது கோட்ட கண்காணிப்பாளர் பதில்களையும் நமது கோட்ட தலைவர் திரு ஞான பாலசிங் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
தோழர் அமீர் திருநெல்வேலி டவுன் பாக்கர் அவர்கள் நன்றியுரை வாசிக்க கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.