அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் 28-3-2017 செவ்வாய் கிழமை அன்று திரு கமலேஷ் சந்திரா தலைமையிலான GDS கமிட்டியின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தகோரி தர்ணா போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.
மத்திய சங்கத்தின் அறைகூவலுக்கு இணங்க நமது AIGDSU நெல்லை கோட்டம் வரும் 28-3-2017 அன்று செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மாபெரும் தர்ணா போராட்டம் நடத்த உள்ளனர்.
நமது கோட்ட சங்க தோழர்கள் திரளாக கலந்து கொண்டு தர்ணா போராட்டம் வெற்றி அடைய அனைத்து தோழர்களையும் வருக வருக என அழைக்கிறோம்.
கோரிக்கையை வென்றெடுக்க ...
அனைவரும் புறப்பட்டு வாரீர்...
இப்படிக்கு
தோழர் கால பெருமாள்
AIGDSU சங்கம்
நெல்லை கோட்டம்