Wednesday, 29 March 2017

மாபெரும் வெற்றியடைந்த நாடு தழுவிய தர்ணா

திரு கமலேஷ் சந்திரா தலைமையிலான GDS கமிட்டியின் சாதகமான சிறப்பம்சங்களை உடனே அமுல்படுத்த கோரி AIGDSU சங்க பொது செயலாளர் 28-03-2017 செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

மத்திய சங்கத்தின் அறைகூவலுக்கு இனங்க நமது நெல்லை கோட்ட AIGDSUசங்கம் திருநெல்வேலி கோட்ட அலுவலகம் - பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்னால் காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கோட்ட தலைவர் திரு ஞான பாலசிங் தலைமை தாங்கினார், கோட்ட செயலாளர் திரு S. கால பெருமாள் வீரஉரை ஆற்றினார், பல்வேறு தோழர்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கம், NCA பேரவை மற்றும் பிற சங்கங்கள் கலந்து கொண்டு ஆதரவு அளித்தனர்,

NCA பேரவை பொது செயலாளர் நெல்லை GDS பாதுகாவலர் மற்றும் ஆலோசகருமான "நெல்லை கட்டபொம்மன்" S. K. ஜேக்கப் ராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

தோழர் மூக்கன் முடிவுரை கூற பெரும் வெற்றியோடு ஒரு நாள் தர்ணா நிறைவு பெற்றது.


தர்ணா போராட்டம் வெற்றியடைய உருதுணையா இருந்த தோழர்களுக்கும் ஆதரவளித்த பிற சங்கங்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். 



FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......