Saturday, 4 March 2017

பொதுக்குழு கூட்டம்

2017 ம் ஆண்டிற்கான முதல் பொதுக்குழு கூட்டம் 28-2-2017 செவ்வாய் கிழமை அன்று AIGDSU நெல்லை கோட்டத்தின் பொது குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்திற்கு கோட்ட தலைவர் தோழர் ஞான பாலசிங் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வரும் மார்ச் 18 மற்றும் 19 தேதிகளில் நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கு பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் திரு கமலேஷ் சந்திரா அவர்களின் GDS கமிட்டி அறிக்கை விளக்க அறிக்கையின் முகப்புரை கோட்ட செயலாளர் தோழர் கால பெருமாள் உரையாற்றினார்.

GDS கமிட்டி அறிக்கையின் விளக்க உரை மற்றும் சாதக பாதகங்கள் குறித்து NCA பேரவை மாநில பொது செயலாளர் தோழர் S. K ஜேக்கப் ராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் திரளான தோழர்கள் கலந்து கொண்டனர். தோழர் S. ராம்குமார் நன்றியுரை கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

குறிப்பு: மாநில மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புவோர் பயண கட்டணமாக ருபாய் 500 ம் பார்வையாளர் கட்டணமாக ருபாய் 600 ( 2 நாட்கள் 3 வேலை உணவு வழங்கப்படும்) தந்து தங்களின் பெயரினை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு

தோழர் : கால பெருமாள்
AIGDSU நெல்லை கோட்டம்.

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......