22-12-2016 அன்று தேசம் முழுவதும் கோட்ட அலுவலகங்கள் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பரித்து எழுந்திருங்கள் தோழர்களே!பெரும் போராட்டத்திற்கு தயாராகுங்கள் !
இனியும் பொறுத்திருக்க முடியாது?GDS கமிட்டி அறிக்கையை மத்திய அமைச்சரிடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
ஏற்கனவே மூன்று வாரங்கள் கடந்து விட்டது...இன்று அமைச்சரை நாங்கள் சந்தித்து பேசினோம், பேச்சுவார்த்தை எதுவும் கனியவில்லை...
இதுபோன்ற செயலை நாம் வன்மையாக கண்டிப்போம்...பிரதம மந்திரிக்கும் நமது துறை தலைவருக்கும் நாம் ஒன்றிணைந்து ஈமெயில் தபால் அனுப்புவோம்
மூன்று வாரங்களாகியும் GDS கமிட்டி அறிக்கையை வெளியிடாமல் காலம் தாழ்த்துவது நம்மை ஒடுக்கும் செயல்...
நிர்வாகமும் அரசும் நமது கோரிக்கைக்கு செவி சாய்த்திட ஒன்றிணைந்து போராடுவோம்
2.6 லட்சம் GDS தோழர்களின் வாழ்வாதாரம் இது, அவர்கள் நம்மை அடக்கி ஒடுக்கும் முன் திமிறி எழுந்து நமது பலத்தை நிரூபிப்போம்
தோழர்களே ஒன்று திரளுங்கள் வரும் 22/12/2016 - வியாழக்கிழமை தேசம் முழுவதும் கோட்ட அலுவலகங்கள் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வோம். அடிமை தழையை அகற்றிடுவோம் நமது வாழ்வின் இலட்சியங்களை வென்றிடுவோம்
சிவப்பு கைகள் ஒன்று சேரட்டும்
வெற்றி நம் கைகளுக்கு வந்து சேரட்டும்
தோழமையுடன் மஹாதேவய்யா