அன்பார்ந்த தோழர்களே நேற்று மாலை 6 மணி அளவில் பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் வைத்து AIGDSU நெல்லை கோட்டம் மற்றும் அம்பை கிளை கோட்டம் பொது குழு கூட்டம் நடைபெற்றது. இதனுடன் அம்பை கிளை செயலாளர் ஏகாம்பரம் அவர்கள் பனி நிறைவு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
கூட்டத்தில் அம்பை புதிய கிளை செயலாளர் ஆக திரு. ராஜராஜன் அவர்களையும் கிளை தலைவர் ஆக மாயாண்டி அவர்களும் மற்றும் கிளை பொருளாளர் ஆக திரு. முருகேசன் அவர்களையும் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்
கூட்டதிற்கு முன்னாள் கோட்ட தலைவர் திரு. கனகராஜ், நெல்லை கோட்ட தலைவர் ஞான பாலா சிங், மற்றும் கோவில்பட்டி கோட்ட செயலாளர் பூ ராஜா அவர்களும் கூட்டு தலைமை தாங்கினார்.
அண்ணன் ஏகாம்பரம் பிரிவு உபச்சார விழாவில் நெல்லை கோட்ட செயலாளர் திரு. காலபெருமாள் அஞ்சல் 4 செயலாளர் S.K. பாட்சா மற்றும் அஞ்சல் 3 கோட்ட செயலாளர் நெல்லை கட்டபொம்மன் S.K ஜேக்கப் ராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கூட்டதில் திரளான தோழர்கள் கலந்து கொண்டு அண்ணன் ஏகம்பரம் அவர்களை வாழ்த்தினர்.
முன்னாள் பொருளாளர் முத்தையா நன்றியுரை கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.