வருந்துகிறோம்
தோழர் S .ராம்குமார் GDSMD தச்சநல்லூர் அவர்களின் தகப்பனாரும் -நாரணம்மாள்புரம் GDSBPM திருமதி கலாதேவி அவர்களின் கணவருமான திரு சங்கரசுப்பு ராஜா (84)அவர்கள் 27.07.17 அன்று அதிகாலை இயற்கை எய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 27.07.2017 மாலை 4 மணிக்கு பாளையம்கோட்டை வெள்ளைக்கோயிலில் நடைபெறுகிறது .அன்னாரை பிரிந்துவிடும் தோழர் ராம்குமார் மற்றும் தோழியர் கலாதேவி அவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் .
(இல்லம் --சக்திநகர் சாந்திநகர் மணிக்கூண்டு அருகில் )
SK .ஜேக்கப் ராஜ் SK .பாட்சா S .காலப்பெருமாள்
Thursday, 27 July 2017
வருந்துகிறோம்
Saturday, 15 July 2017
கூட்டு பொதுக்குழு மற்றும் அண்ணன் ஏகாம்பரம் பிரிவுஉபச்சார விழா
அன்பார்ந்த தோழர்களே நேற்று மாலை 6 மணி அளவில் பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் வைத்து AIGDSU நெல்லை கோட்டம் மற்றும் அம்பை கிளை கோட்டம் பொது குழு கூட்டம் நடைபெற்றது. இதனுடன் அம்பை கிளை செயலாளர் ஏகாம்பரம் அவர்கள் பனி நிறைவு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
கூட்டத்தில் அம்பை புதிய கிளை செயலாளர் ஆக திரு. ராஜராஜன் அவர்களையும் கிளை தலைவர் ஆக மாயாண்டி அவர்களும் மற்றும் கிளை பொருளாளர் ஆக திரு. முருகேசன் அவர்களையும் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்
கூட்டதிற்கு முன்னாள் கோட்ட தலைவர் திரு. கனகராஜ், நெல்லை கோட்ட தலைவர் ஞான பாலா சிங், மற்றும் கோவில்பட்டி கோட்ட செயலாளர் பூ ராஜா அவர்களும் கூட்டு தலைமை தாங்கினார்.
அண்ணன் ஏகாம்பரம் பிரிவு உபச்சார விழாவில் நெல்லை கோட்ட செயலாளர் திரு. காலபெருமாள் அஞ்சல் 4 செயலாளர் S.K. பாட்சா மற்றும் அஞ்சல் 3 கோட்ட செயலாளர் நெல்லை கட்டபொம்மன் S.K ஜேக்கப் ராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கூட்டதில் திரளான தோழர்கள் கலந்து கொண்டு அண்ணன் ஏகம்பரம் அவர்களை வாழ்த்தினர்.
முன்னாள் பொருளாளர் முத்தையா நன்றியுரை கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
Friday, 14 July 2017
இன்று பொதுக்குழு கூட்டம்
தோழர்களேஇன்று
நடைபெறும்அம்பைகிளைசெயலாலர்ஏகாம்பரம்பிரிவுஉபாசாரவிழாமற்றும்
பொதுக்குழுகூட்டத்தில்அனைத்துதோழர்களும்தவராதுகலந்துகொள்ளவும
அதில்தோழர்ஏகாம்பரம்இரவுஉணவுஏற்பாடுசெய்துள்ளார்
AIGDSU. NELLAI
கமிட்டி அறிக்கை நிதி அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது
கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கை (MOC) தகவல் துறை அமைச்சகத்தில் 12.07.2017 அன்று ஒப்புதல் பெற்று நிதி அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்று, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இச்செய்தியினை அனைத்து தோழர்களுக்கும் தெரிவித்து நமது சங்க சேர்க்கையை விரைவு படுத்திட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
Wednesday, 12 July 2017
நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
திரு கமலேஷ் சந்திரா தலைமையிலான கமிட்டி அறிக்கையை உடனடியாக அமுல்படுத்த கோரி இன்று மாலை 06.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திரளான தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் S. வேலுசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தோழர் அப்துல் சமது, ராம்குமார் உரையாற்றினார்கள். கோட்ட தலைவர் I. ஞான பாலசிங் சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் தோழர் நம்பி நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் வெற்றியுடன் நிறைவுற்றது.
AIGDSU
நெல்லை கோட்டம்
ஆர்ப்பாட்டம்
இன்று மாலை 5 மணியளவில் பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தின் முன்பு கமலேஷ் சந்திரா அறிக்கையை உடனடியாக அமுல்படுத்திட வேண்டி நடைபெற உள்ள ஆர்பாட்டத்தில் நெல்லை கோட்டத்தை சேர்ந்த GDS தோழர்கள் தோழியர்கள் அனைவரும் தவறாது கொள்ள வேண்டுகிறோம்
I . ஞானபாலசிங்
கோட்ட தலைவர்
S. காலபெருமாள்
கோட்ட செயலாளர்
அடையாள அட்டை
அன்பார்ந்த தோழர்களே,
GDS ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்ககோரி கோட்ட அளவிலான பல மாதாந்திர பேட்டிகளில் நமது சங்கம் கோரி வந்த நிலையில் மாநில அளவில் அனைத்து GDS ஊழியர்களுக்கும் அடையாள அட்டை வழங்குமாறு அனைத்து கோட்ட அலுவலகங்களுக்கும் CPMG அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.
அதற்கான உத்திரவு நேற்று நமது கோட்ட அலுவலகத்திற்கு வந்து விட்டது இது குறித்து அனைத்து SO கும் இன்று MAIL அனுப்பப்பட்டுள்ளது.
ஆதலால் வரும் 13-07-2017 க்குள் PP SIZE போட்டோ, ருபாய் 9.00 UCR ல் கட்டி ரசிதுடன் நிரப்பப்பட்ட பாரத்தை SPM மூலம் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு: உங்களுடைய வீட்டு முகவரியானது B. O பட்டுவாடா எல்லைக்குள் இருக்குமாறு தரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிக்கு
I. ஞான பாலசிங்
கோட்ட தலைவர்
S. கால பெருமாள்
கோட்ட செயலாளர்
நெல்லை கோட்டம்