சென்னை அதிர்ந்தது
GDS கமிட்டி அறிக்கையை வெளியிடக்கோரி இன்று நாடு முழுவதும் உள்ள சர்க்கிள் அலுவலங்கள் முன்னால் நமது தோழர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஏற்கனவே 22-12-2016 அன்று கோட்ட அலுவலகங்கள் முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் பெரும் வெற்றியை தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டம் சர்க்கிள் அலுவலங்கள் முன்னால் நடைபெற்றது குறிப்படத்தக்கது.
சென்னை சர்க்கிள் அலுவலகம் முன்னால் இன்று நமது தமிழக AIGDSU தோழர்கள் 1000 துக்கும் மேற்பட்ட தோழர்கள் சமுத்திரமென திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இலாகாவும் மத்திய அரசும் வெளிப்படைத்தன்மையுடன் நடக்கவேண்டும் என்றும் ,மௌனம் களைத்து உடனடியாக திரு கமலேஷ் சந்திரா தலைமையில் சமர்ப்பித்த GDS PAY கமிட்டி அறிக்கையை வெளியிடவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்திய அஞ்சல் துறை வரலாற்றில் ஒரு சங்கம் தனித்து 1000 துக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது இதுவே முதல் முறையாகும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நமது தோழர்களின் முழக்கத்தால் சென்னையே அதிர்ந்தது. ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி அடைந்தது.
தோழமையுடன்
தோழர்: கால பெருமாள்
ஏற்கனவே 22-12-2016 அன்று கோட்ட அலுவலகங்கள் முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் பெரும் வெற்றியை தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டம் சர்க்கிள் அலுவலங்கள் முன்னால் நடைபெற்றது குறிப்படத்தக்கது.
தோழமையுடன்