Tuesday, 16 February 2016

அன்பான  GDS தோழர்களே ! வணக்கம் !  
அவசரம் !  அவசியம் !
GDS  ஊழியர் கமிட்டிக்கான கோரிக்கை மனு  
ஒவ்வொரு GDS  ஊழியரும் நேரடியாக அளித்திட  ஒரு  வாய்ப்பு !
GDS  ஊழியர்களுக்கான  ஊதியம் மற்றும் பணித்தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்திட ஒய்வு பெற்ற அஞ்சல் வாரிய உறுப்பினர் திரு.  கமலேஷ் சந்திரா அவர்கள்  தலைமையிலான ஒரு நபர்  கமிட்டி ஒவ்வொரு  GDS ஊழியரிடமிருந்தும் அவர்களது கருத்துக்களை அனுப்புமாறு கேட்டுள்ளது.

எனவே ஒவ்வொரு  தோழர்களும் உங்கள்  பகுதியில் உள்ள ஒவ்வொரு GDS ஊழியர்களிடமும் இதை தெரிவித்து , அவர்களது தெளிவான பெயர் மற்றும் பணி செய்யும் அலுவலகம் கோட்டம் மற்றும் அஞ்சல் வட்டம் குறிப்பிட்டு, கையெழுத்து இட்டு, அதனை கீழே காணும் ஈமெயில் முகவரிக்கும் மற்றும் கீழே குறிப்பிட்டுள்ள  திரு. கமலேஷ் சந்திரா அவர்களின் முகவரிக்கு  ஸ்பீட் போஸ்ட்  மூலமும்  தவறாமல் அனுப்பிட வேண்டு கிறோம். இந்த வாய்ப்பை  தயவு செய்து  தவற விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். gds .com .feedback @gmail .com அல்லது indiapost .gov .in /dop /feedback .aspx என்ற மின் அஞ்சலில் அனுபலாம் .அல்லது தபாலிலும் அனுப்பலாம் .
விலாசம் 
To

Shri Kamlesh Chandra
Chairman,
Gramin Dak Sevak Committee
Ministry of Communication & IT
Government of India
Malcha Marg Post office Building
New Delhi – 110021



                கோரிக்கை மனு வேண்டுவோர்  எங்களை தொடர்பு கொள்ளவும் .
TRCA க்கு பதில் SCALE  OF PAY அறிமுகபடுத்தவேண்டும் 
இடமா றுதலில் உள்ள  கடுமையான நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டும் .
BPM களை BO  உள்ள  கிராமத்தில் இருக்க வேண்டும் என்பதை நீக்க வேண்டும் .
POINT SYSTEM நீக்க படவேண்டும் .
எல்லா GDS களுக்கும் ஒரே மாதிரி ஊதியம் வேண்டும் .
இலாகா ஊழியரை போல் பதவிக்குத்தான் சம்பளமே தவிர வேலைக்கு சம்பளம்  நிர்ணயம் செய்யக்கூடாது  போன்ற எதார்த்த கோரிக்கைகள் முன் வைப்போம் .
                            தொடர்புக்கு S.Kalaperumal9715907767

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......