Monday, 29 January 2018

தோழர் காலபெருமாள் கோட்ட செயலாளர் மறைவு






நெல்லை AIGDSU சங்கத்தின் கோட்ட செயலர் -
தோழர் S .காலப்பெருமாள் GDSMD விஜயநாராயணம் நாவல்பேஸ் அவர்கள் நேற்றிரவு நாங்குநேரி -திசையன்விளை சாலை ஏமென்குளம் அருகில் சாலைவிபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார்கள் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதிச்சடங்கு இன்று 29.012018 நண்பகல் நடைபெறும் .
 
தோழர் காலப்பெருமாள் அவர்கள் AIGDSU சங்கத்தின் நெல்லை கோட்ட செயலர் -மாநில உதவி செயலர் என்று பல்வேறு பொறுப்புகளில் வகித்தவர், தனது சிம்ம குரலால் போராட்டங்களில் கர்ஜனை புரிந்தவர்.

Gds க்கான திரு கமலேஷ் சந்திரா தலைமையிலான 7வது ஊதிய குழு கமிட்டி நேரடி பரிந்துரை கேட்பில் CEA எனும் குழந்தைகள் கல்வி உதவித்தொகை கோரிக்கையை முன்வைத்தவர்.... ஏராளமான போராட்டங்களில் முழங்கியவர்... சிறந்த போராளி....

அன்னாரது ஆன்மா சாந்தி அடையவும் அவரது குடும்பத்திற்கு மண அமைதியையும் இறைவன் வழங்க வேண்டும் என பிராத்தனை செய்கிறோம்


நெல்லை கோட்டம்.



Sunday, 28 January 2018

நெல்லை கோட்ட செயலாளர் தோழர் காலபெருமாள் காலமானார்

நெல்லை கோட்ட செயலாளர் தோழர் காலபெருமாள் காலமானார்


FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......