Monday, 26 June 2017

ரமலான் நல் வாழ்த்துக்கள்

தோழர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்

AIGDSU
நெல்லை கோட்டம்


Saturday, 24 June 2017

GDS உறுப்பினர் சேர்க்கை மற்றும் சரிப்பார்த்தல்

அன்பார்ந்த GDS தோழர்களே !    
    அஞ்சல் துறை GDS ஊழியர்களுக்கான சங்கத்தை அங்கீகரிக்கும் பொருட்டு ஊழியர்களிடையே உறுப்பினர் சேர்க்கையை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது .ஒருதொழிலுக்கு ஒரு சங்கம் -ஒரு கேடருக்கு ஒரு சங்கம் தான் இருக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை .எழுத்தர் சங்கத்தில் GDS இருக்கமுடியாது .தபால் காரர் சங்கத்தில் GDS எவரும் பொறுப்புக்கு வரமுடியாது .அப்படி இருக்கும் பட்சத்தில் GDS ஊழியர்கள் சங்கத்தில் ஏன் எழுத்தர் சங்கமும் -தபால்காரர் சங்கமும் மூக்கை நுழைக்கிறது .GDS கோரிக்கையை NFPE -FNPO சங்கங்கள் எடுத்து வாதாடவும் முடியாது -வாதாடவும் தெரியாது .பிறகு ஏன் சில ஓய்வு பெற்ற எழுத்தர்கள் --ஓய்வு பெற்ற தபால் காரர்கள் GDS ஊழியர்களிடம் பிளவை ஏற்படுத்தி தங்களுக்கு என்றும் நிரந்தர அடிமையாக GDS ஊழியர்கள் இருக்கவேண்டும் என்று அலைகிறார்கள் .ஆகவே நமது GDS ஊழியர்கள் இலாகா ஊழியர்களின் ஆசை வார்த்தையில் மயங்கியோ --பெரிய மனுசன் சொல்கிறான் என்று பெரிய தவறையோ செய்து விடாதீர்கள் .நமக்காக தொடங்கப்பட்ட AIGDSU எனும் சங்கம் முழுக்கமுழுக்க GDS ஊழியர்களின் நலனுக்காக GDS ஊழியர்களால் நடத்தப்படும் ஒரு புரட்சி இயக்கம் .இன்று NFPE சங்கத்தில் இருந்து ஓய்வுபெற்ற சிலர் நம்மை துண்டாட வருகிறார்கள் எச்சரிக்கையாக இருங்கள் .GDS கோரிக்கையை ஏழாவது ஊதியக்குழு விசாரிக்காவிட்டால் போராடும் என்றார்கள் போராடினார்களா ?அவர்கள் நிலையே பரிதாபம் .இலாகா ஊழியரை போல் GDS ஊழியர்களுக்கும் 7000 போனஸ் கேட்டு போராடியபோது அந்த பெரிய மனிதர்கள் நமது போராட்டத்திற்கு எதிராக வேலைக்கு போக சொன்னார்களே மறக்கமுடியுமா ? நிர்வாகம் GDS கோரிக்கையை நபிபெ-FNPO பேசக்கூடாது என உத்தரவிட்டதை மறைத்து நோட்டீஸில் மட்டும் GDS கோரிக்கை உள்ளே பேசுவது தனக்கு வெளிநாட்டு பயணம் .GDS ஊழியர்களின் விடிவெள்ளி தோழர் மஹாதேவையா GDS அவர்தான் நமது தலைவர் -AIGDSU சங்கம் தான் நம் சங்கம் -இலாகா திட்டவட்டமாக அறிவித்துவிட்டது GDS சங்கத்திற்கு NFPE -FNPO என்ற சம்மேளனத்துடன் தொடர்பு கிடையாது .GDS சங்கம் என்பது முற்றிலும் GDS களால் மட்டுமே நடத்தப்படும் என சொல்லிவிட்டது .ஆனாலும் சில செவிடன் காதில் விழுந்த சங்காக அதை ஏற்காமல் GDS ஊழியர்களை பிளவுபடுத்த முனைகிறார்கள் .எச்சரிக்கையாய் இருங்கள் .இலாகாவில் இருந்துஓய்வு பெற்ற எவராவது GDS சங்கத்திற்கு கையழுத்து கேட்டு வந்தால் கேளுங்கள் 60 ஆண்டுகளாக NFPE கொடி கட்டவும் கூட்டம் சேர்க்கவும் தான் GDS களை பயன்படுத்தினீர்கள் --மீண்டும் ஏன் எங்களை அடிமைப்படுத்த நினைக்கிறீர்கள் என்று கேளுங்கள் .ஐய்யா பெரிய மனிதர்களே GDS ஊழியர்களை வாழவிடுங்கள் --GDS ஊழியர்களுக்கு வழிவிடுங்கள் --உண்மையிலே GDS ஊழியர்களுக்கு உதவவேண்டும் என நினைப்பவர்கள் இனியாவது எங்களை தொடராதீர்கள்தொந்தரவு செய்யாதீர்கள் -தொடாதீர்கள் --எங்கள்ச ங்கம் AIGDSU சங்கம் -தனியாக போராடினாலும் எங்கள் தலைவர் சிங்கம்
வாழ்க AIGDSU
தோழமையுடன்
I.ஞானபாலசிங்  S.கால பெருமாள்  A.நம்பி S.ஏகாம்பரம்  A.ராஜராஜன்
திருநெல்வேலி -அம்பாசமுத்திரம் கிளைகள்


FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......