Wednesday, 9 November 2016

                                                     GDS செய்திகள்  
மத்திய அரசு ஊழியர்களுக்கு பஞ்சபடி 2 சதம் உயர்ந்து நேற்று SB கிரெடிட் கொடுக்கப்பட்டுவிட்டது .GDS ஊழியர்களுக்கு 5 சதம் பஞ்சப்படி உயருகிறது .அதாவது 7வது சம்பளக்குழு பெறாத ஊழியர்களுக்கு தனி அளவில் பஞ்சப்படி  நிர்ணயிக்கப்படும் .
2.நமது கோட்ட 10வது மாநாடு 04.12.2016 நடைபெறுவதை தாங்கள் அறிந்ததே .இதற்காக நேற்று நன்கொடை கொடுத்தவர்கள் 
மானுர் --ரூபாய் 2400
முனைஞ்சிப்பட்டி --2000
டவுண் ---                 2100
அனைவருக்கும் கோட்டசங்கத்தின் சார்பாக நன்றிகள் .
 இன்று அஞ்சலக BO ,SO மற்றும்  HO களில் எந்தவிதமான பணம் சம்பந்தமான வரவு --செலவுகள் நடத்த கூடாது என்று CPMG அலுவலகத்தில் இருந்து உத்தரவுகள் வந்துள்ளது .தோழர்கள் இதை நமது அலுவலக நண்பர்களுக்கு தெரிவிக்கவும் . 
                                                   தோழமையுடன் 
I .ஞான பாலசிங்                                                                  S.காலப்பெருமாள்  

Tuesday, 8 November 2016

கருப்பு பணத்தை மீட்க மோடி அதிரடி நடவடிக்கை : இன்று இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது

FLASH NEWS! FLASH NEWS! FLASH NEWS! FLASH NEWS! FLASH NEWS!

கருப்பு பணத்தை மீட்க மோடி அதிரடி நடவடிக்கை : இன்று இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது






புதுடெல்லி: டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். நாட்டு மக்களுடன் பல முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புவதாக மோடி தெரிவித்தார். உலக பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக சர்வதேவ செலவாணி நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளதாக மோடி தெரிவித்தார். ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காகவே தமது அரசு அர்ப்பணிப்புடன் பாடுபடுவதாக தெரிவித்த மோடி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே தமது அரசின் இலக்காகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

மேலும் ஊழலும், கருப்பு பணமும் நாட்டின் உறுதி நிலையை சீர்குலைப்பதாக மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். வறுமையை ஒழிப்பதே தமது அரசின் குறிக்கோள் என்றும், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மோடி தெரிவித்தார். 1.25 லட்சம் கோடி கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார். எல்லைக்கு அப்பால் உள்ளவர்கள் தீவிரவாதிகளுக்கு பண உதவி அளித்து வருவதாகவும்,  பயங்கரவாதிகளுக்கு கொடுக்க எதிரிகள் கள்ள நோட்டுகளை அச்சிடுவதாகவும், பாகிஸ்தானை பிரதமர் மோடி மறைமுகமாக சாடினார். தவறுகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது என மோடி தெரிவித்தார். 

இன்று இரவு 12 மணி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருவோர் அடையாள அட்டை காட்ட வேண்டும், இதற்காக வங்கிகளில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்படும் என்று மோடி தெரிவித்தார். மேலும் நாளையும், நாளை மறுநாளும் ஏ.டி.எம். வேலை செய்யாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நவம்பர் 10 முதல் வங்கி மற்றும் தபால் நிலையங்களிலும் ஒப்படைக்கலாம் என்றும், வங்கிகள் ஏற்றுக் கொள்ளாத பணத்தை ரிசர்வ் வங்கியில் கொண்டு மாற்றி கொள்ளலாம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இன்று இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது

500, 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்

500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருவோர் அடையாள அட்டை காட்ட வேண்டும்

டிசம்பர் 30-ம் தேதிக்குள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம்

டிசம்பருக்கு பிறகு கையிருப்பில் ரூ.500, 1000 நோட்டுகளை மாற்ற முடியாது

நாளையும், நாளை மறுநாளும் ஏ.டி.எம். யைமங்கள் வேலை செய்யாது

அரசு மருத்துவமனைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை நவம்பர் 11-ம் தேதி வரை வாங்கி கொள்வார்கள்

அஞ்சலகங்களிலும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை 100 நோட்டுகளாக மாற்றலாம்

நவம்பர் 11-ம் தேதி வரை பெட்ரோல் பங்குகள் ரயில் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டு செல்லும்

விமான நிலையங்களிலும் ரூ.500, 1000 நோட்டுகள் நவம்பர் 11-ம் தேதி வரை செல்லும் என அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை விடுமுறை என பிரதமர் மோடி அறிவிப்பு

பழைய நோட்டுகளை பெற்றுக் கொண்டு புதிதாக ரூ.500 மற்றும், ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்படும்

மத்திய அரசின் நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது






நமது சங்க முக நூல் பக்கம் (facebook page) உங்கள் பார்வைக்கு 
facebook GROUP ID - RURAL POSTAL EMPLOYEES UNION NELLAI
JOIN செய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் 



தொழிளார்கள் கை ஓங்கட்டும்... 
நமது வாழ்வு மலரட்டும்...
ஒன்றுபடுவோம் தோழர்களே ஒன்றுபடுவோம் 
ஒன்றுபட்டு போராடுவோம்...
அடிமைத்தளையை கலைந்திடுவோம் ...
வெற்றி நமதே! வெற்றி நமதே!




நேற்று GDS மாநாட்டிற்கு நன்கொடை கொடுத்த GDS தொண்டர்கள்  விவரம் 

1. மானுர் -Rs.2400
2. முனைஞ்சிப்பட்டி - Rs.2000

நன்கொடை கொடுத்த தொண்டர்களுக்கும் அதை பிரித்து குடுத்த முன்னணி தொண்டர்களுக்கும் நன்றி 

மற்ற தொண்டர்கள் தங்களுக்கான நன்கொடை தொகையை விரைந்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நன்றி 

இப்படிக்கு 
GDS சங்கம் 
நெல்லை கோட்டம் 

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......